திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்ததில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, நேரில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் காரை பொதுமக்கள் மறித்து முற்றுகையிட்ட சம்பவம் நடந்தது.
இதில், டிரைவர்கள், தொழிலாளர்கள் 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.குவாரி உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்தனர்.
நெல் வெளியில் பாறை சரிந்து 4 பேர் சிக்கிய அடை மிதிப்பான் குளம் கல்குவாரி பார்வையிட வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை சுற்று வட்டார கிராம மக்கள் முற்றுகையிட்டு செய்தனர். நடந்த சம்பவத்திற்கு இன்று மாலையில் வந்து அரசியல் செய்கிறீர்களா என ஆவேசத்துடன் கேட்டனர். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் விதிமுறை மீறிய குவாரி உரிமையாளர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து கெரோ செய்தனர்.பொதுமக்கள் வழிமறித்ததால் வேறு வழியின்றி காரை விட்டு இறங்கிய அமைச்சரும், சபாநாயகரும் சம்பவ இடத்திற்கு நடந்தே சென்றனர்.
No comments:
Post a Comment