Sunday, May 15, 2022

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

 ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் நல்ல திறமைசாலி, ஆனால் மிகவும் சோம்பேறி. அப்போது அதே கிராமத்தில் திருமணம் செய்துகொள்ள ஒரு வீட்டில் பெண்கேட்டான். பெண்ணின் தந்தை ஒரு போட்டியை அறிவித்தார்.என்ன போட்டி என்றால் மாட்டுத் தொழுவத்தில் 3 காளை மாடுகள் இருக்கு, ஒவ்வொரு மாடாக அவிழ்த்துவிடுவேன். ஏதேனும் ஒரு மாட்டின் வாலைப் பிடித்துவிட்டால் என் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். போட்டிக்கு சரியென்று பெண் கேட்க வந்தவனும் ஒப்புக் கொண்டான். முதல் காளையை விட்டான். சீற்றத்தோடு கொம்பை இங்கும் அங்கும் ஆட்டி வந்ததையும், மிகுந்த சீற்றத்தோடு வந்ததையும் பார்த்து அந்த மாட்டை விட்டுவிட்டு ஒதுங்கிக் கொண்டான் . இரண்டாவது காளை பெரிய காளை தரையைப் பிளந்து யார் வந்தாலும் கொம்பால் குத்திவிடுவேன் என்று மிரளமிரள பாய்ந்து வருவதைப் பார்த்தவன் குலைநடுங்கி, அடுத்த காளையின் வாலைப் பிடித்துக் கொள்ளலாம் என்று இதையும் விட்டுவிட்டான் அடுத்த மூன்றாவது காளை வத்தலா , தொத்தலா சாதுவாக வந்ததைப் பார்த்து இளைஞனுக்கு ஏகப்பட்ட சந்தோசம் , தாங்கமுடியவில்லை இதன் வாலைப் பிடித்துவிடலாம் என்று முடிவு செய்து காளையை நெருங்கியவனுக்கு பெரும் அதிர்ச்சி. காரணம், காளைக்கு வாலே இல்லை. வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பயன்படுத்திக் கொள்ள தயாராகும்போது வாய்ப்புகள் வராமல் போகலாம். இப்படித்தான் நம்மில் பலரும் வாழ்க்கையில் வாய்ப்புகளை வாலில்லாத காளையாக நழுவ விட்டு விடுகிறோம்...

முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார் , என்ற வள்ளுவரின் வாக்கை என்றும் நினைவில் கொள்வோமாக…👏🏿👏🏿👏🏿👏🏿!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...