கணவன் ஒரு நாள் கடவுளிடம் முறையிட்டான்
நான் நாள் முழுவதும் வெளியே வேலை செய்கிறேன், என் குடும்பத்திற்காக உழைக்கிறேன்.. ஆனால் என் மனைவி வீட்டில் என்ன செய்கிறாள்?
அவள் வாழ்க்கை ரொம்ப ஈஸியா இருக்கு.
கடவுள் சொன்னார்
அப்படின்னா, இரண்டு நாள் நீ மனைவியாக இரு.
உன் மனைவியை கணவனாக மாற்றி விடுகிறேன்
கணவனும் அதற்கு ஒத்து கொண்டான்.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு அலாரம் அடித்தது.
அவன் எழுந்து எல்லோருக்கும் மதிய உணவு தயார் செய்தான்,
அடுத்து குழந்தைகளை தயார் செய்து பள்ளிக்கு அனுப்பினான்.
பின்னர், மனைவியை எழுப்பி அவளுக்கும் நாஸ்டா செய்து கொடுத்தான்.
மனைவி ஆஃபீஸ் போன பிறகு, வீட்டை கூட்டி சுத்தம் செய்தான்.
அவன் நாஸ்டா செய்ய உட்கார்ந்த போது வேலைக்காரி வந்தாள்.
வேலைக்காரி போனதும், பசங்கல ஸ்கூல் விட்டு வர நேரம் ஆகிவிட்டது.
அவங்களுக்கு சாப்பாடு கொடுத்து, ஹோம் ஒர்க் செய்யச்சொல்லி கொடுத்தான்.
இரவு உணவை சமைத்து விட்டு, பசங்களை டியூஷன் கொண்டு சென்றான்.
இரவு மனைவி வந்ததும், எல்லோருக்கும் உணவு பரிமாறினான்,
மனைவி சாப்பாட்டில் குற்றம் சொன்னாள்.
அடுத்த நாள் காலை எழுந்ததும்,
கடவுளிடம் மீண்டும்.. கடவுளே என்னை ஆணாக மாற்று என்று வேண்டினான்.
எனக்கு புரிந்து விட்டது பெண்கள் எவ்வளவு வேலை செய்கிறார்கள் என்று.
.
.
.
.
.
கதையில் இப்பதான்.. Twist..
.
.
.
.
.
.
.
கடவுள் சொன்னார்.
நான் உன்னை இரண்டு நாட்கள் மட்டுமே பெண்ணாக இருக்க வரம் கொடுத்தேன்.
ஆனால் இப்போ நான் நினைத்தாலும் உன்னை என்னால் ஆணாக மாற்ற முடியாது.
ஏனென்றால், நீ நேற்று இரவு கர்ப்பமாகி விட்டாய்
பார்ப்போம் 9 மாதம் கழித்து
கதை நகைச்சுவைக்காக என்றாலும் கருத்து பெண்மையின் சிறப்பை உணர்த்தவே.
ஆண்களிடம் யாராவது உங்க மனைவி வேலைக்கு போகின்றார்களா?
என கேட்டால் இல்லை இல்லை ஹவுஸ் வைப் தான் என்பர் மிக சாதாரணமாக ஆனால் பெண்கள் செய்யும் வேலையை ஒருநாள் கூட முழுமையாக செய்ய முடியாது என்பதே வாழ்வியலின் நிதர்சனம்.
No comments:
Post a Comment