என்னடா வாழ்க்கை ??
என்ன நம்ம வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டு இருக்கிறது ??
வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருக்கு அடுத்த கட்டம் என்று ஒன்று என் வாழ்க்கையில் கிடையாதா ??
இப்படி பற்பல கேள்விகள் நம்முள்ளே ..
அதுவும்
என்னோடு பிறந்தவன் அப்படி இருக்கான் ??
எனக்கு தெரிந்த அவன் இப்படி முன்னேறி கொண்டு இருக்கிறான் ??
இப்படியும் பற்பல ஒப்பீடுகள் நம்முள்ளே .
இன்னும் ஒரு படி மேலே போய்
இறைவா அவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்க்கை !!
நான் மட்டும் இப்படியே இருக்கிறேனே ??
இப்படி பொதுவாக எல்லோரிடமும் ஏதாவது ஒரு வகையில் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும் !!
அப்போது முன்னேற்றம் என்பது பணம் / சொத்து / உடல்நலம் / மனநலம் / ஆன்மிகம் / அரசியல் என்று எந்த துறையில் எப்படி பார்த்தாலும் ஏதாவது ஓர் முடக்கம் / அதிலும் ஏதாவது ஓர் முன்னேற்றம் வந்தால் கூட அதை கடந்து போகாது இருப்பது ஏன் ??
இறைவன் அனைவருக்கும் எல்லாம் தான் கொடுத்து இருக்கிறான் ..
அதை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே நம் வாழ்க்கை !!
பொதுவாக
நாம் பெற்ற பலமாக கருதுவது
உடல் / பணம் / உறவு / உணவு / வாழும்முறை / கல்வி / அறிவு ...
ஆனால்
அத்தனை பலத்தையும் கடந்த / அத்தனை பலத்துக்கும் பிரதானமான பலம் என்று ஒன்று இருக்கு !!
அதுவே
இந்த பலத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படி தான் நாம் வாழ்வு ..
பொதுவாக அனைவருக்கும் இந்த ஆன்ம பலம் என்பது பொதுவான ஒன்றாகவே அருளப்பட்ட இருக்கு ..
நம் உடல் பலத்தை கூட்ட , பாதுகாக்க, வளர்க்க நம் செலுத்தும் கவனம் ..
நம் ஆன்மபலத்தில் காட்டுவது இல்லை ..
ஏன் அப்படி ஒன்று இருக்கு என்று கூட நாம் அறிந்தது இல்லை ..
ஆனால் இந்த ஆன்மபலத்தை செலவு செய்வதில் மட்டும் நாம் முன்னோடிகளாக இருக்கிறோம் ..
உங்கள் ஆன்மபலம் என்பது உங்கள் ஆன்மாவோடு தொர்புடையது ..
உங்கள் உடலால் செயலால் அறிவால் செய்யமுடியாத பலவற்றை இந்த ஆன்மபலத்தை கொண்டு சாதித்துக்கொண்டுதான் இருக்கிறோம் !!
அதுவே நம் எண்ண குவியலை கையாளும் விதம் !!
எண்ணம் போல வாழ்வு என்பது கூட ஆன்மபலத்தை கூட கூறப்படுவதுதான் ..
நம் எண்ணம் நம்முள்ளே கூடி இருக்க,
நம்முள்ளேயே ஆழ்ந்து பயணிக்க ..
நாம் எண்ண சிதறல்கள் கடந்து இருக்க ..
நமது ஆன்மபலம் பெருகும் ..
அதுவே நம் எண்ணத்தை எங்கோ எதிலோ சிந்தித்து செலவு செய்ய நம் ஆன்மபலம் நம் எண்ணம் குவிவது எதுவாகினும் அதற்க்கு வலுசேர்க்கும் உங்களிடம் அதற்கான இழப்பும் பிரதிபலிக்கும் ..
இதுவே நமது முன்னேற்றத்திற்கு இருக்கும் முடக்கம் !!
உதாரணமாக
உங்கள் எண்ணம் உங்களோடு இருக்கு,
உங்களுள் ஆழ்ந்து பயணிக்க,
உங்களை பற்றியே உங்கள் எண்ணம் இருக்க,
எதையும் ஒப்பிடாமல், எது எப்படி போகுது ?? அது அப்படி ஆகும் ?? போன்ற எண்ணம் உங்கள் ஆன்ம பலத்தை அந்த எதற்க்கோ தாரைவார்க்கும் ..
இப்போது உங்களுக்கு கிடைக்கவேண்டிய பரிபாகுவும் !! தெளிவு !! நம்முள்ளே நாமே உணரவேண்டிய தடை போன்ற அத்தனைக்கும் பயன்படவேண்டிய உங்கள் பலம் ..
உங்கள் எண்ணத்தால் உங்களோடு ஈர்க்கப்படவேண்டியவைகள் ஈர்க்க வைக்கும் உங்கள் பலம் ..
உங்கள் எண்ண சிதர்வால் உங்களுக்கும் பயனற்று !! வேறு யாருக்கோ செலவாகி !!
நீங்களும் முன்னேறாது ..
யாரோ முன்னேறிக்கொண்டு இருக்கிறார்களே என்பவர்கள் முன்னேற்றத்திற்க்கு பரிமாறி ..
நீங்கள் உங்கள் எண்ணத்தை மாட்டும் தாரைவார்த்து கொண்டு
நீங்கள் அப்படியே இருந்து கொண்டு
என்னடா வாழ்க்கை ??
இப்படியே போகுது !!
இறைவன் எனக்கு அருளவில்லை .. என்று புலம்பி கொண்டே இருக்கிறோம் ..
நாம் நம்மோடு இருக்க !!
நம்மை எதற்கும் காரணமாக நம்முள்ளே இருப்பவனை நோக்க !!
நம்மிடம் இருக்கும் குறைகளை கவனம் செலுத்த !!
நம்மோடு தொடர்புடையது எதுவெல்லாம் என்று உணர !!
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எதுவுமாக இருந்து !!
உங்களுள் ஆத்மார்த்தமாக கலந்து !!
உங்களுக்கான ஆன்மபலத்தை அருளிக்கொண்டே இருக்கிறது ..
அதை தொலைப்பதில் காட்டும் அக்கறை ..
நம்முள்ளே காட்டுவது இல்லை ...
குறை நம்மிடம் மட்டுமே ..
வேறுயெங்கும் குறையில்லை ..
பெரும்பாலும் ஊடகம் / டிவி சிரியல் / திரைப்படம் போன்றவையெல்லாம் நம் ஆன்மபலத்தை நம்மறியாதே திருடும் ஓர் வழிமுறையே ..
நம்மோடு நமாமிருக்க நமக்கேது குறை !!
( இப்படி இப்பதிவை கூட இன்னும் தன் ஆன்மபலத்தை தொலைத்துக்கொண்டு இருப்பவன் தான் போடுகிறேன், என்று உணர்த்தியாலும் திருவருளை போற்றி பணிகின்றேன் )
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா.
No comments:
Post a Comment