Friday, May 13, 2022

நன்றி மறந்து வாழ்வது நினைவின்றி வாழ்வதற்கு சமம்.

 சில குற்றங்களை மன்னிப்பதாலும், சில குறைகளை மறப்பதாலும், தான்.இன்னும் பல உறவுகள் நீடிக்கின்றன.

பேராசை கொண்டவன் உலகத்தையே பரிசாக கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டான்.
உங்கள் வாழ்தலில் மகிழ்ச்சி வேண்டுமெனில், தேவையானதை தேடி செல்லாதீர்கள்.
உங்களிடம் இருக்கும் தேவையற்றதை விலக்குங்கள். எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிறவன் கிட்ட கொஞ்சம் நேரம் பேசிப் பாருங்களேன். ஏதாவது கஷ்டத்துல போராடிட்டு இருப்பான்.
நம் எதிர்காலத்தை நாமே உருவாக்குகிறோம். அதில் ஏதேனும் தவறானால் அதையே 'விதி' என்கிறோம்.
ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
பாறை போல் உட்கார வேண்டாம் கடிகாரம் போல வேலை செய்யுங்கள். இழந்த அனைத்தையும் மீட்டு விடலாம். நம்பிக்கையை இழக்காதிருந்தால்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...