பெரும்பாலும் கோர்ட்டு கேஸ்சுனு அலையனும்னா அது பணக்காரங்களால மட்டும்தான் முடிகிறது. டாக்டருக்குப் படித்துவிட்டு மருத்துவப் பணியில் இருக்கும் டாக்டர்கள் பலர் நலிவுற்ற ஏழைகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாக சேவைபுரிகின்றனர்.
அதுபோல் வழக்கறிஞர்களில் இருப்பதாகத் தெரியவில்லை! வக்கீல்கள் என்றாலே பணம்தான் அவர்களது குறிக்கோள் என்பதாக எண்ணி அலறும் ஏழைகள் பலர் பணம் செலவு செய்யமுடியாததற்கு அஞ்சி, தாங்கள் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்க முடியாமல் சிறைக்கு செல்கின்றனர்.
ஏழைகளுக்கென்று சேவை மனப்பான்மையுடன் பணியாற்றக்கூடிய வழக்கறிஞர்கள் இருக்கின்றார்களா? அல்லது இலவச சட்ட ஆலோசணைகள் வழங்கி, மிகக்குறைந்தளவு கட்டணம் பெற்றுக்கொண்டு வாதாடும் வழக்கறிஞர்கள் இருக்கின்றார்களா? இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறதா?
இது ஒரு சமுதாய அக்கறையுடன் கேட்கப்படும் கேள்வி. சமூக அக்கறையுள்ள டாக்டர்கள் இருப்பதுபோல வக்கீல்கள் இருப்பதாகத் தெரிவதில்லை அதனால்தான் இந்தக் கேள்வி! (அந்த கூலித் தொழிலாளியின் கேள்விக்கு பதில் கிடைக்குமா?)
No comments:
Post a Comment