Sunday, May 15, 2022

மனதிற்கு நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

 1. காலை எழுந்தவுடன்

முதலில் அடுப்பினை துடைக்கணும்... இரவில் துடைத்து இருந்தாலும் கூட.. மேலாகவாவது துடைக்கணும்
(அந்த காலத்தில் சாணி வைத்து மெழுகினாங்கல அதைப்போல...கேஸ் அடுப்பு என்பதால் வெகு எளிதாக துடைத்திடலாம்)
2. இரவிலே படுக்க செல்லும் போதே
தாளிக்கிற பெட்டி மற்றும் பருப்பு வகைகள்
மிளகாய் போன்ற
சமையலறைப்பொருட்களை
நிரம்ப எடுத்து வைத்துட்டு சென்று உறங்கி
காலையில் சமையல் அறைக்குள் நுழைந்ததுமே
அனைத்து பொருட்களூம் நிரம்ப இருப்பதே
மனதிற்கு நிறைந்த மகிழ்ச்சியாக இருக்கும்
3. கல்உப்பு
அரிசி
மஞ்சள் போன்ற பொருட்களை
காலையில் எழுந்து
நிரம்ப கொட்டி வைத்துக்கணும்.
4. அடுப்படியில்
இரவில்
Night lamb போன்ற விளக்கினை on செய்துவிட்டால் கரப்பான் பூச்சி போன்ற
பூச்சிகள் இருக்காது.
5. கரப்பான் பூச்சிக்கு
மறக்காமல்
சாக்பீஸ்
கோடு போடணும்
6. சமையல் அறையில் எந்த ஒரு பொருள் தீர்ந்து போனாலும், அரிசி இல்லை என்றால் கூட
வீட்டில் அரிசி இல்லை என்று கூறாமல், அரிசி
நிறைவாக இருக்கிறது என்று தான் கூறணும்.
7.எந்த ஒரு உணவினையும் வீணாக்க கூடாது.
கொஞ்சம் கூட சமைத்த உணவு இருந்தால்
கூட
எந்த ஒரு உயிருக்காவது அதை கொடுத்து பசியாற்றிடணும்... வீணாக்க கூடாது
8. தினமும் யாராவது ஒருவருக்கு எதாவது ஒரு உதவி
கட்டாயம் செய்யணும்.
9. நம்மை கடந்து செல்பவர்க்கு
உதவ முடியாக சூழ்நிலையில் கூட
ஒரு புன்னகையாவது புரியணும்
10. தினமும் உணவில்
சீரகம் அவசியம் சேர்த்துக்கணும்.
சீர்+அகம்
உடம்பினை சீராக வைத்துக்க உதவுவது என்பது பொருள்.
11. தினமும் எதாவது உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கணும்
12. மன ஆரோக்கியம் பெற
தினமும் குடும்பத்தினருடன்
குறைந்தது ஐந்து நிமிடங்கள் செலவளிக்கணும்.
13. நம் நலனுக்கு பிரார்த்தனை செய்வதை விட
அனைவரின் நலனுக்கும் பிரார்த்தனைகள் செய்வது தான்
நன்மை பயக்கும்.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...