Sunday, May 15, 2022

"தமிழ் வேண்டும்"

 இன்று காலை ஒரு கஸ்டமர் கேரிலிருந்து அழைப்பு...

வழக்கம் போல ஹிந்தியில் ஆரம்பித்தார்கள்...
நானும் வழக்கம் போல (ஹிந்தி தெரிந்தும்) தமிழில் ஆத்திசூடி சொன்னேன்...
மறுபடியும் வழக்கம் போல ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்கள்... ஆனால் வழக்கம் போல நான் ஆங்கிலத்தில் பேசவில்லை (சமீபகாலமாக பல நம்மூர் பெரியவர்கள் ஆங்கிலம் தெரியாமல் இத்தகைய கஸ்டமர் கேர் அழைப்புகளில் அவதிப்படுவதை பார்த்த பின் முடிந்தவரை தமிழிலேயே கஸ்டமர்கேரிடம் பேசுகிறேன்)
இறுதியாக
"ராஜகோபாலன் சார்...விச் லாங்குவேஜ் யூவார் கம்ஃபடபிள் வித்" என்றது எதிர்க்குரல்
"ஐம் கம்ஃபடபிள் ஒன்லி வித் தமிழ் என்றேன்"
ஒரு வித குழப்பத்தில் ஃபோன் கட் செய்தார்
IT அலுவலகத்தில் ஆங்கிலம் தானே பேசுகிறீர்கள் என நீங்கள் வாதம் வைக்கலாம்
IT அலுவலகத்தில் மொழி இல்லா சமவெளி...க்ளோபல் கம்யூனிகேஷன்... இங்கு பொதுமக்கள் தொடர்பு கிடையாது... பப்ளிக் சர்வீஸ் இல்லை
ஆனால் இத்தகைய கஸ்டமர் கேர், நம் மண்ணின் சொத்து எடுத்து நம் மக்களின் பணத்தை வைத்து வியாபாரம் செய்யும் பெரு முதலாளிகளின் முகம்... இந்த மண்ணின் கஸ்டமர்களுக்கு கேர் என சொல்லிவிட்டு இந்த மண்ணின் மொழி தெரியாத ஆட்களை பணியில் அமர்த்துவது எவ்வளவு பெரிய கயவாலித்தனம்... இவனுங்க காசு வேண்டும் ஆனால் இவர்களுக்கு ஏற்றவாறு நாங்க மாற மாட்டோம், எங்கள் மொழியில் தான் இவர்கள் பேச வேண்டும் என்கிற திமிர்.
திமிர்க்கு திமிர் தான் காட்ட வேண்டும்.
அதுக்கு தான் யார் எடுத்தவுடன் ஹிந்தியில் பேசினால் நான் ஆத்திசூடி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிப்பேன்
இப்படி இருக்க மறுபடியும் அதே கஸ்டமர் கேரிடமிருந்து கால்.... இம்முறை செந்தமிழில்
வணக்கம் சார் என்று ஆரம்பித்து எதிர்க்குரல்
பேசி முடித்தபின்
"ஏன்ங்க முன்னாடி தமிழில் பேசாமல் ஹிந்தியில் ஆங்கிலத்தில் பேசினாங்க" என்றேன்
"சார் ஆங்கிலம் ஹிந்தி அதிகம் பேர் கஸ்டமர்கேரில் இருக்காங்க சார்... தமிழ்ல குறைவுதான் " என்றார்
நாம இந்த பெரு முதலாளிகளின் திமிர்க்கு திமிர் காட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் நாம நினைத்தால் இங்கே நம்மூரில் பலருக்கு வேலை வாய்ப்பு பெற்று தர முடியும் என்றே தோன்றியது
எந்த கஸ்டமர்கேர், வங்கிகள், இன்சூரன்ஸ் என எந்த கால் வந்தாலும் தமிழில் இல்லையெனில் "தமிழ் வேண்டும்" என சொல்லி துண்டித்து விடுங்கள்..
உங்களுக்கு பல மொழிகள் தெரிந்து இருந்தாலும்... இப்படி பெரும்பாலானவர்கள் செய்தோம் என்றால் தமிழ் பேசக்கூடிய பலரை அவர்கள் பணியமர்த்த தான் வேண்டும் அந்த கட்டாயம் ஏற்படும்...
இதை ஒரு உறுதிமொழியாக எடுத்து செய்வோம்....
மறவாதீர்கள் நீங்கள் துண்டிக்கும் ஒவ்வொரு ஆங்கில ஹிந்தி அழைப்பும் வேலை இல்லா ஒருவர்க்கு வேலை வாங்கி தர முடியும் ...
இதல்லாமல், எதாவது காசு போட்டுட்டு இல்ல சாமான் வாங்கி போட்டுட்டு ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தால் தான் உங்களுடைய வேண்டியவை கிடைக்கும் என அநீதி இழைக்கப்படும் ஒரு மூதாட்டிக்கு நல்லது செய்தது போலவும் ஆகும் .
மற்றவர்களிடமும் இந்த வேண்டுகோளை வையுங்கள்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
May be an image of 2 people and phone

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...