இந்த உலகியலில் நீங்கள் எத்தனை உண்மையாக இருந்தாலும், உங்களின் எண்ணம் செயல் போன்று மற்றவருக்கு இருப்பதில்லை! நல்லவற்றை ஏற்க மனம் இருப்பதில்லை!
பாராட்ட மனம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நற்செயலுக்கு துணையாக நிற்க மனமின்றி, பாதகம் விளைவிக்கும் செயல்களை செய்வதையே வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார்கள்.
அவ்வாறு இருக்க, நீங்கள் எதற்கும் அஞ்சாதீர்கள், கோப படாதீர்கள். மாறாக உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனைகள் விரைவில் சரியாகி விடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு உங்கள் கடமையை சிறப்பாக செய்யுங்கள். கடமையை தவறாதீர்கள்! கருமம் தீரும்!
விரைவில் அதிசயம் நிகழும், அந்த அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும். அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம், நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் உலகத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். ஆதலால் உலகத்தினை உணர்ந்து வணங்குங்கள். இயற்கையோடு சிறந்து பயணித்து நல்லதை மட்டும் செய்யுங்கள்!
இங்கு உங்களுக்கு ஏற்றவாறு எல்லோரையும் மாற்ற இயலாது. நீங்கள் உங்களுக்கு சம்மந்தம் அல்லாததை தேவையற்ற ஆராய்ச்சிகள் செய்து எவரையும் எடை போடாதீர்கள். உண்மையில் உலகத்துடன் கலந்து, மக்களை காக்கும் நற்செயல்கள் செய்பவர்களை மதியுங்கள்!
அதனால் உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் உலகத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும் என்று நம்புங்கள்!
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படாதீர்கள். உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்தாதீர்கள்.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளை குறை சொல்லாதீர்கள். நிறையை நினையுங்கள்! உங்கள் நேர்மறை எண்ணங்களில் எல்லா வெற்றியும் கிடைக்கும். நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, உலகத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். இதுவே சக்திவாய்ந்த செயல்முறையாகும். உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்.
அதை விடுத்து மற்றவர்களை புன் வாழுதல் கூடாது. வயோதிகர்கள் அன்பை உதாசீனம் படுத்தி உறவை இழந்து விடாதீர்கள்...
நாளை உங்களுக்கும் மூப்பு வரலாம்.
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை...
No comments:
Post a Comment