நமக்கு தெரிந்த சிவ உறவு, என்னதான் நாம் இறைவனை வாங்கினாலும், நம்மிடம் பிறர் கேட்க்கும் கேள்வி " நீ இவ்வளவு சாமி கும்பிடுறே, ஆனால் இன்னும் கஷ்டத்தில் தானே இருக்கே ?? " என்று அவர்கள் சொல்வதை பார்த்தால் நான் கஷ்டப்படுவது போலவே எனக்கு தெரிகின்றது ஏன் ??
உண்மையில் நாம் யாரையாவது பார்த்து கஷ்டப்படுகிறார்கள் என்ற நினைப்பு எப்படி நமக்கு வருகின்றது ?? என்ற எண்ணத்திற்கு நம் கொஞ்சம் பயணித்து பார்ப்போமா !!
யாரவது கஷ்டப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைக்க காரணம் ..
நீங்கள் அனுபவிப்பது போல அவர்கள் அனுபவிப்பது இல்லை ??
அல்லது
உங்களிடம் இருப்பது அவர்களிடம் இல்லை ??
அல்லது
இதுவெல்லாம் கஷ்டம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் பட்டியலோடு அவர்கள் ஒத்து போகிறார்கள் ??
உண்மையில் அப்படியா ??
உங்கள்வரையே அது கஷ்டம் என்ற எண்ணம் ..
ஆனால்
அவர்கள் வாழ்க்கையில் அது இயல்பு ..
நீங்கள் வசதி என்று நினைப்பது எல்லாம் தரும் தொல்லை அவர்களுக்கு இல்லை !!
நாம் கஷ்டப்படுகிறோம் என்று யாரோ நினைப்பதை நாம் ஏற்றுக்கொண்டால் தான் நம் கஷ்டப்படுகிறோம் என்ற நினைப்பே நமக்கு வருகிறது !!
உண்மையில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து பாருங்கள் ..
உங்களுக்கு என்ன தேவையோ அதுயெல்லாம் உங்களை சரியாக அடைந்து கொண்டே தான் இருக்கின்றது ..
அது உங்கள் வாழ்க்கையை வாழ தேவையான அனைத்தும் அதில் இருக்கின்றது ..
ஆனால்
யாருக்கோ கிடைத்தது போல ??
யாருக்கோ நடப்பதுபோல ??
போன்ற ஒப்பிடுதான் உங்கள் கஷ்டம் எல்லாம் ..
உதாரணமாக
கார் இருந்தால் வசதி ?? சந்தோஷம் ?? பெருமை ?? கெத்து !!
கார் இல்லாதவர்கள் எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் !! அது உங்கள் எண்ணம் ..
சரி
அந்த வசதி !! சந்தோஷம் !! பெருமை !! கெத்து !! போன்ற ஒன்றுக்காக நீங்கள் இழந்தது ??
எங்கு போனாலும் அருகில், முன்னே, பின்னே போகும் வண்டிகள் உரசிவிடுமோ என்ற அச்சம் !!
அதை பராமரிக்க நீங்கள் செலவு செய்யும் நேரம், உழைப்பு, பணம் !!
இதுயெல்லாம் ..
கார் இல்லது நீங்கள் இருந்தபோது கிடைத்த உங்கள் பயணங்களின் சந்தோஷத்தை விட குறைவு தானே !!
இப்போது கஷ்டம் யாருக்கு ??
இதுபோல தான் எல்லாமே ..
இறைவன் அனைவரையும் அவர்களுக்கான ஆத்மதிருப்தி, விடுதலை உணர்வு, அவர்களால் முடிந்த சூழல், போன்றவற்றில் இருத்தி தான் வாழ்வித்து கொண்டு இருக்கிறான் ..
மற்றவர்கள் அவர்கள் அவர்களிடம் உணராத கஷ்டத்தை யாருக்கோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ..
அதை ஏன் ஏற்க்க நீங்களும் நீங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் சந்தோஷத்தை, விடுதலை உணர்வை, மறந்து ஏற்க வேண்டும் ??
நாம் பரிதாபத்துக்கு உரியவர் என்பதில் என்ன பெருமை உங்களுக்கு ??
யாராவது என்னை பார்த்து பரிதாப படுங்களேன் என்று ஏன் மாஸிகமாக பிச்சை எடுக்க வேண்டும் ??
உங்களுக்கு என்று ஓர் உலகத்தை கொடுத்து இருக்கிறான் !!
அதில் யார் இருக்க / போக ??
எது வர / விலக ??
என்று தீர்மானிக்கும் ராஜ்யத்தையும் கொடுத்து இருக்கான் ..
அந்த உலகத்தில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷம் !! ஆனந்தம் !! அமைதி !! போன்றவற்றை யாராலும் யூகிக்கக்கூட முடியாது தானே ..
அப்புறம் என்ன ??
உங்கள் ராஜ்யத்தின் ராஜா நீங்கள் !!
நீங்கள் யாருக்கோ போய் நான் ராஜா இல்லை கூஜா என்று ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும் ??
நம்மை என்ன அப்படியா வைத்திருக்கான் ..
எல்லா ஜீவராசிகளுக்கும் அதற்க்கு
தேவையானதை,
தேவையான சமயத்தில்,
தேவையான விதத்தில் கொடுத்துக்கொண்டே இருப்பதால் தானே
இப்பிரபஞ்சம் இயங்கிக்கொண்டு இருக்கு ??
இத்தனையும் பெற்றும் அனுபவித்தும் கஷ்டம் என்பதும் !!
கஷ்டத்தின் மீது உள்ள உங்கள் இஷ்டத்தின் வெளிப்பாடே ..
திருச்சிற்றம்பலம் .
No comments:
Post a Comment