Thursday, May 12, 2022

ஒரு நொடிகூட அதை விட்டுப் பிரிவதே இல்லை!”

 தில்லியை ஆண்ட சுல்தானின் அரண்ம னை க்கு ராமாநுஜர் எழுந்தருளினார்.

அவர் உள்ளே நுழைந்த அடுத்த நொடி, தன் அரண்மனையே தெய்வீகக் களை பெற்றதாக உணர்ந்தார் சுல்தான்.
“மன்னரே! நீங்கள் தென்னாட்டை வென்ற போது, சில சிலைகளை அங்கிருந்து எடுத் து வந்து உங்கள் வெற்றியின் அடையாள மாகக் காட்சிப்படுத்தி வைத்துள்ளீர்கள் என அறிந்தேன்..."
"மேலக்கோட்டையில் உள்ள பெருமாளின் விக்கிரகமும் உங்களிடம் உள்ளது என்று எம்பெருமானே என் கனவில் வந்து சொன் னான். அந்தப் பெருமாளை தந்தால், உயி ரை இழந்த உடல்போல இருக்கும் மேலக் கோட்டை கோயில் உயிர் பெறும்!” என்று
சுல்தானைப் பார்த்துச் சொன்னார் ராமாநுஜர்.
“நான் பல சிலைகளைக் கொண்டு வந்து ள்ளேன். மேலக்கோட்டைப் பெருமாளின் விக்கிரகம் எது என்று எப்படி நீங்கள் கண் டறிவீர்கள்? ஏற்கெனவே அந்தப் பெருமா ளை நீங்கள் பார்த்ததுண்டா?” எனக் கேட் டார் சுல்தான்.
“நான் இதுவரை அவனைத் தரிசித்ததில் லை. ஆனால் நான் வாஎன்று அழைத்தால் அந்த எம்பெருமான் ஓடோடி வந்து என் மடியில் அமர்ந்து விடுவான்!” என்றார் ராமாநுஜர்.
அவரது நம்பிக்கையைக் கண்டு வியந்த மன்னர், தான் வென்று வந்த சிலைகளை வைத்திருக்கும் அறைக்கு ராமாநுஜரை அழைத்துச் சென்றார்.
“என் செல்வப் பிள்ளையே! சம்பத்குமாரா! வா!” என்றழைத்தார் ராமாநுஜர். அங்கிரு ந்த சிலைகளில் எதுவும் அசையவில்லை.
மீண்டும் மீண்டும் ராமாநுஜர் அழைத்துப் பார்த்தும் எந்தச் சிலையும் அசையவே இல்லை.
ராமாநுஜரின் நம்பிக்கையைப் புண்படுத் தக் கூடாது என்று எண்ணிய மன்னர், அவ ரை ஏளனம் செய்யாமல், “நீங்கள் இங்குள் ள சிலைகளுள் ஒன்றையோ சிலவற்றை யோ எடுத்து செல்லுங்களேன். உங்களை வெறும் கையோடு அனுப்ப எனக்கு மனமி ல்லை!” என்றார்.
ஆனால் ராமாநுஜரோ, “இல்லை! எனக்கு என் செல்வப் பிள்ளைதான் வேண்டும். நா ன் அழைத்தால் அவன் வருவான். நீங்கள் கொண்டு வந்த அனைத்து விக்கிரகங்க ளும் இங்கேதான் உள்ளனவா?” என்று கேட்டார்.
அதற்கு மன்னர், “எல்லாச் சிலைகளும் இங்கு தான் உள்ளன. ஒன்றை மட்டும் எனது மகள் விளையாடுவதற்காகத் தன் அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கி றாள். என் மகள் அந்த விக்கிரகத்தின் மே ல் அதீதமான காதல் கொண்டிருக்கிறாள்.
ஒரு நொடிகூட அதை விட்டுப் பிரிவதே இல்லை!” என்றார்.
“நான் அந்த விக்கிரகத்தைப் பார்க்கலா மா?” என்று கேட்டார் ராமாநுஜர். மன்னர், “நாங்கள் அந்தப்புரத்துக்குள் ஆண்களை அனுமதிப்பதில்லை. ஆனால், உங்களது பெருமாள் விசுவாசம் என்னை வியக்க வைக்கிறது. எனவே வாருங்கள்!” என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
அந்தப்புரத்தை அடைந்து அந்த விக்கிரக த்தைக் கண்டார் ராமாநுஜர். “செல்வப் பிள்ளாய்! வாராய்!” என்றார். அடுத்த நொ டியே எம்பெருமான் ஓடிவந்து ராமாநுஜரிட ன் மடியிலே அமர்ந்து கொண்டான்.
சுல்தானின் அனுமதியோடு அந்த எம்பெ ருமானை மேலக்கோட்டைக்கு அழைத்துச் சென்று பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர்.
அப்போது எம்பெருமான் கண்களில் இருந் து கண்ணீர் வடிவதை கண்டார் ராமாநுஜ ர்.“ஏன் கண் கலங்கியிருக்கிறாய்?” என்று வினவினார்.
“நான் எனது மெய்யடியார்களுக்கு என் னையே வழங்குபவன். அந்த சுல்தானின் மகள் என் மீது அளப்பரிய மையல் கொண் டிருந்தாள். அவள் அன்புக்கு மயங்கி நான் என்னையே அவளுக்குத் தந்துவிட்டேன். ஆனால் அவளை விட்டுப் பிரித்து என்னை
இங்கே அழைத்து வந்துவிட்டீர்களே! அத னால்தான் கண்கலங்குகிறேன்” என்றான் எம்பெருமான்.
உடனே சுல்தானின் மகளை மேலக்கோட் டைக்கு அழைத்து வந்தார் ராமாநுஜர்.
அவளது பக்தியின் பெருமை உலகுக்கு விளங்குவதற்காகத் ‘துலுக்க நாச்சியார்’ என்று பெயரிட்டு, விக்கிரக வடிவில் அவ ளைப் பெருமாளின் திருவடிவாரத்தில் பிரதிஷ்டை செய்தார்.
இன்றும் மேலக்கோட்டை திருநாராயணப் பெருமாள் திருவடிவாரத்தில் ‘துலுக்க நாச் சியார்’ இருப்பதைக் காணலாம். அந்தத் துலுக்க நாச்சியார் போன்ற உயர்ந்த அன் பும் பக்தியும் கொண்ட அடியவர்களுக்குத் தன்னையே தந்து விடுவதால் எம்பெருமா ன் ‘புருஷ:’ என்று அழைக்கப்படுகிறான்.
‘புருஷ:’ என்றால் பக்தர்களுக்கு பரிசாகத் தன்னையே வழங்குபவன் என்று பொரு ள்.அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் பதினான்காவது திருநாமம். “ புருஷாய நம:" என்று ஜபித்து வருபவகளுக்கு வாழ் க்கையில் மிகச்சிறந்த பரிசுகள் கிட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...