Monday, May 2, 2022

கொடுமையை பாருங்கள்...

 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில்

"வழக்கமான ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழியை மாணவர்கள் வாசித்தனர்".
இதற்கு அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் அதிருப்தி தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பேசிய டீன் ரத்தினவேலு மத்திய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலின் பேரில் மாணவர்களே தயாரித்த உரையை அவர்கள் வாசித்தனர். இதில் நிர்வாகத்திற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷும்
"2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்ததன் அடிப்படையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட உறுதிமொழி அது. அதில் எந்தவித உள் நோக்கமும் கிடையாது. முழுக்க முழுக்க மாணவர்கள் தயாரித்த உறுதிமொழி, அதில் டீன் தலையீடு இல்லை "
என்றே தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் விளக்கங்களை கருத்தில் கொள்ளாமல்
ஏதோ கொடூரமான குற்றம் செய்து விட்டது போல அவசரம் அவசரமாக
மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் அவர்களை பதவியில் இருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை கிளப்பி உள்ளது.
"கையெழுத்து போட்ட உடனே ஆத்துக்கு வண்டிய விடலாம்" ன்னு பிரச்சாரம் செய்தவருக்கு
டாஸ்மாக், மின்சார துறை என்று பவர்
அரசு ஊழியரை தரக்குறைவாக ஜாதியை சொல்லி திட்டிய அமைச்சரின் பதவியை பறிக்காமல், வெறும் இலாகா மாற்றம்.
ஜெய்ஹிந்த் சொல்லமாட்டோம், எதுக்கு சொல்லனும் னு கேட்டவர், சட்டசபையில் எதிர் கட்சி உறுப்பினர்களை கடினமான வார்த்தைகளில் வசைபாடியவர் உயர் கல்வி துறை அமைச்சர்.
சட்ட சபையில் தமிழில் பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் ஆங்கிலத்தில் வாசித்த நிதியமைச்சர் தியாகராஜன் தான்,
விழா மேடையில் மாணவர்கள் எப்படி சமஸ்கிருதம் பயன்படுத்தலாம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்.
கொடுமையை பாருங்கள்...
இதெல்லாம் ரொம்பவும் ஓவர்
நல்ல்ல விடியல்... வேறென்ன?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...