Monday, May 2, 2022

இதே தருமபுரம் ஆதீனம் போன வாரம்தான் தமிழக அரசு ஒரு ஆன்மீக அரசு என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார்.

 தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்குவதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால், மீறி அனுமதித்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நாலு பேர் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் நிலைமையில்தான் தமிழக சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னொன்றும் உள்ளது. இத்தனை நாட்களாக பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒற்றைக் குறிக்கோளை வைத்து காய் நகர்த்தி வந்த திமுக அதற்காக ஏனையோரைப் பயன்படுத்தி வந்தது. குறிப்பாக இதே தருமபுரம் ஆதீனம் போன வாரம்தான் தமிழக அரசு ஒரு ஆன்மீக அரசு என்று நற்சான்றிதழ் வழங்கியிருந்தார். அதற்கான பரிசுதான் இந்தத் தடை என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் புரிந்து கொள்ள வேண்டியது, இவர்களுக்கு ஒட்டு மொத்த ஹிந்து மதத்தின் மீதுதான் காண்டு என்பதுதான்.
இதைப் புரிந்து கொள்ளாமல் பார்ப்பன எதிர்ப்பு என்று மட்டும் எடுத்துக் கொண்டு அவர்களை தூக்கிக் கொண்டாடும் யாராக இருந்தாலும் கை மேல் பலன் அனுபவிப்பார்கள். பாவம் தருமபுரம் ஆதீனம்.
(இணைப்பு : கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின் போது திமுக உதயநிதி ஸ்டாலினுடன் தர்மபுர ஆதீனம் உரையாடிய பழைய (கோப்பு) புகைப்படம்)
May be an image of 4 people, people standing and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...