Sunday, May 1, 2022

ஊராட்சி தலைவர் எங்களுக்கு வேண்டாம் கிராம சபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்.

 காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் எங்களுக்கு வேண்டாம் என மனு கொடுத்துள்ளனர். கூட்டத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.



latest tamil news



காஞ்சிபுரம் அடுத்த, ஆற்பாக்கம் ஊராட்சி தலைவராக இருளர் இனத்தை சேர்ந்த செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற சில நாட்களில் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் என்பவருக்கும், ஊராட்சி தலைவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இரு மாதங்களுக்கு முன் ஊராட்சி தலைவர், அலுவலகத்திற்கு சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினா
பின் வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பவ இடத்திற்கு சென்று பிரச்னையை பேசி தீர்த்து வைத்தார். இந்நிலையில், கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதியில் ஆறுமுகம் என்பவர் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார். அவர் முறையாக தண்ணீர் விடுவதில்லை என கூறி பலர் புகார் தெரிவித்தனர்.
மேலும், ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் உறவினர் திலகம் என்பவரை பம்ப் ஆப்பரேட்டராக பணி அமர்த்த வேண்டும் என கூட்டத்தில் பலர் கூறினர்.அது குறித்தும் கிராம சபையில் பொது மக்கள் மனு கொடுத்தனர். மேலும் ஊராட்சி தலைவர் எங்களுக்கு தேவையில்லை என கூறி சிலர் மனு கொடுத்துள்ளனர். கிராம சபை கூட்டத்தில் தகராறு ஏற்படலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
* காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவி சரிதா தலைமை வகித்தார். வாலாஜாபாத் தணிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஊராட்சி செயலர்கள் சாந்தமூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். கம்மவார்பாளையம் கிராம சாலை ஓரம் மரக்கன்றுகள் நட வேண்டும். இளைஞர்கள் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* வேண்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி தலைவி சரளா தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வட்டார வேளாண் அலுவலர் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
* தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். பற்றாளர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அம்பிகாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், பாலாறு குடிநீர் வழங்கப்பட வேண்டும்; மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமல் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சீட்டணஞ்சேரி ஊராட்சியில், அப்பகுதி ஊராட்சி தலைவர் எழிலரசி யுவராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. விளையாட்டு மைதான வசதி மற்றும் உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
* காட்டாங்குளம் ஊராட்சி தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், இளைஞர்கள் பலர் பங்கேற்று, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட படூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்றக்கோரி வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று, ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட சுகாதாரமாக மாற்றிட ஒப்புதல் தீர்மானம் பெறப்பட்டது.
* நாஞ்சிபுரம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர். ஒரு முறை மற்றும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை, ஊராட்சியில் முற்றிலும் தடை செய்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\
* உத்திரமேரூர் ஒன்றியத்தில் நடந்த கூட்டங்களில், ஊராட்சியின் வரவு - செலவு கணக்கு குறித்து, பதாகை அமைத்திருந்தது.
* காஞ்சிபுரம் ஒன்றியத்தில், ஆற்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமை வகித்தார். துாய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் எம்.பாஸ்கரன் பங்கேற்றார். ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
* மாகரல் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மேத்தா தலைமை வகித்தார். வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன் பங்கேற்றார். ஊராட்சி செயலர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிநீர் வசதி செலவினங்களான கைப்பம்பு, விசை பம்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் பராமரிப்பு, மின்சார வசதிக்கான செலவினங்கள், பொது நிதியில் எடுக்கப்பட்ட மூலதனப் பணிகள் அதன் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
* திம்மசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், வரவு - செலவு ஒப்புதல் பெறப்பட்டது. புதிய அங்கன்வாடி மையம், குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...