இடி விழும் போது மூத்தப் புள்ள வெளியே போகக்கூடாது...
வீட்டுக்கு வெளிய வேப்பிலைய வச்சா பேய் வராது.
மழை பெய்யும் போது வெயில் அடிச்சா காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம்...
பெளர்ணமி அன்னிக்கி நாகபாம்பு மாணிக்கம் கக்கும்...அத ஒரு வெள்ளைத் துணியில எடுத்து வெச்சுக்கிட்டா கேக்கறது கிடைக்கும்.
நல்லபாம்பை போட்டா எடுத்தா 20 வருஷமானாலும் மறக்காம கொத்துமாம்...
பப்பிள்கம்ம முழுங்குனா செத்திடுவோம்.
காக்கா குளிச்ச தண்ணியில முகம் கழுவுனா கண் கட்டிப் போயிடும்;
Evil dead படம் தனியா
தியேட்டர்ல் பார்த்தா
பணம் தருவாங்க
இதுவரைப் பார்த்தவங்க
எல்லாம் ஹார்ட் அட்டாக்ல செத்துட்டாங்க....
அரிசி திங்காதடா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்....
தண்ணியில பென்சில சீவி போட்டா அழி லப்பர் ஈசியா செய்யலாம்.
தண்டவாளத்துல காச வச்சம்னா ரயிலு ஏத்துனதும் அது காந்தமா மாறிடும்..
பறக்கிற கொக்கப் பாத்து கொக்கு கையில வெள்ளப் போடு சொன்னா கையில வெள்ளப் போடும்.
ஆறு மணிக்கு மேல விசில் ஊதுனா பாம்பு வந்துருமாம்...
சாணில இடி விழுந்தா அந்த சாணி எல்லாம் தங்கமா மாறிடும்
டேய் தோள்லந்து கைய எடுடா அப்புறம் வளர மாட்டேன்.!
ரெட்டை சுழி இருந்தா ரொம்ப சேட்டை பண்ணுவாங்க
நகத்தை வெட்டி வீட்டுக்குள்ள போடாதடா வீடு வெளங்காமப் போயிடும்;
பொழுது போனதுக்கு அப்றம்..
விசிலடிக்காத... வீட்டுக்குள்ள பாம்பு வரும்...
பச்சை பாம்பு பறந்து வந்து கொத்தும்;
தேன்ன நக்கிட்டு மண்டையில் தடவுனா முடி நரைச்சுப் போகும்.
மயில் இறகை புக்ல வச்சாக் குட்டி போடும்...
வீட்டு வாசல்ல காக்கா கத்துனா வீட்டுக்கு விருந்தாளி வருவாங்க.
பல் விழுந்தா சாணியில போட்டு ஓட்டு மேல எறிஞ்சா உடனே பல்லு முளைக்கும்..
No comments:
Post a Comment