காது கொடுத்துக் கேளுங்கள்..''உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்சனை என்று வந்தால்.,அவர்களைப் பேச விட்டு அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.
மற்றவர்களின் துன்ப துயரங்களில் ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள். ஏனென்றால் யாருக்கு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.
அது மாதிரியான நிகழ்வுகள் நமக்கும் வரலாம்.அடுத்த முறை நம்முடையதாகவும் கூட இருக்கலாம்.
மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;
நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாகப் பேசுங்கள்..இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு.......
No comments:
Post a Comment