Sunday, January 15, 2023

ஒரு விபரீத கற்பனை ஆண்டு 2200.

 அண்ணாவின் ஆவியும், அவர் அருமைத்தம்பி கருணாநிதி ஆவியும் சேர்ந்து கொண்டு தாங்கள் உருவாக்கிய தமிழகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது என்று பார்க்க வருகிறார்கள்.

என்ன ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கோவில்கூட இல்லை. கோவில் இருந்த இடங்களில் எல்லாம் மசூதிகளும், சர்ச்சுகளும் தான் இருக்கின்றன. இருவரும் மனம் மகிழ்ந்து "அடடா, கோவில்களை இல்லாத தமிழ் நாட்டைக் காண எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் நம் நாட்களில் பண்ண வேண்டும் என்று நினைத்து நம்மால் செய்ய முடியாததை நம் வாரிசுகள் செய்து விட்டனரே என்று பூரித்துப் போயினர். நிறைய மசூதிகள் வந்துவிட்டதாலே இனி ரம்ஜான் போது குடிக்க நிறைய கஞ்சி கிடைக்கும் என்று மனதிற்குள் கருணாநிதி மகிழ்ச்சி கொண்டார்.
அண்ணா சாலைக்குப் போவோம் என்று இருவரும் கிளம்புகின்றனர். சென்னை இப்போது சென்னாபாத் ஆகி இருந்தது. அண்ணா சாலை அப்துல்லா சாலை ஆகிவிட்டது.
என்ன என்னுடைய சிலையைக் காணோம் ? அண்ணா கதறுகிறார்.
ஐயையோ! என்னுடைய சிலையையும் காணோமே என்று கதறி அழுகிறார் கருணாநிதி அண்ணாவிற்கு சற்றும் சளைக்காமல்.
சரி. நம் தலைவர் பெரியார் சிலையாவது இருக்கிறதா பார்ப்போம் என்று பெரியார் சிலையைத் தேட ஆரம்பிக்கின்றனர்.
"அடடா, என்ன கொடுமை, பெரியார் சிலை ஒன்று கூட இல்லையே. என்ன ஆயிற்று நாங்க அந்த மாதிரி பகுத்தறிவு பேசினவங்களுக்கு அவங்களைப் பெருமைப் படுத்தற மாதிரி வீதிக்கு ஒரு சிலை, எல்லாக்கோவில் வாசல்லேயும் ஒரு சிலைன்னு வெச்சி சூடம் கொளுத்தி மாலை போட்டு மரியாதை செஞ்சு பகுத்தறிவைத் தெருத் தெருவாப் பரப்பினோமே. நாங்க அங்கங்கே கண்ட இடத்திலும் வெச்ச சிலைகளெல்லாம் ஒண்ணுகூட இல்லியே. சரி. என்ன ஆயிற்று என்று விசாரிப்போம்"
தெருவில் சென்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்கின்றனர்.
.அவர்: "சிலை ....வெக்கிறதெல்லாம் .......இந்துக்களோடே .......முட்டாள்தனம்னு ......சொல்லி அத்தனை .....சிலைகளையும் ....கடல்லே ......போட்டுட்டாங்க".
என்று தட்டுத்தடுமாறி ஒருவர் பேச "ஏன் தமிழில் பேசத்தயங்குகிறீர்கள்?" என்று கேட்க "உஸ், மெதுவாகப் .....பேசுங்கள்.....தமிழில் நாங்கள் பேசுகிறோம் என்று தெரிந்தால் ......எங்களுக்குக் கசையடி .....கிடைக்கும்" என்றார்.
"ஏன், தமிழுக்கு இந்த இழுக்கு?"
"அது காட்டுமிராண்டிகளோடே பாஷைன்னு சொல்லி அது வெறும் இந்துமத மற்றும் புராணக் குப்பை மொழின்னு சொல்லி அதனாலே தமிழ்நாட்டின் தேசிய மொழியான உருதுவும், அதுக்கு அடுத்தபடியா இருக்கிற ஆங்கிலமும் தமிழாலே அழிஞ்சி போயிடுங்கிற பயத்தாலே இந்த உருதுஸ்தான்லே தமிழுக்குத்தடை விதிச்சிருக்காங்க."
"என்ன உருதுஸ்தானா?"
"ஆமாம்.தமிழ்நாடுங்கற பேரை உருதுஸ்தான்னு மாத்திட்டாங்க.
போன வருடம் கூட மாணவர்கள் தமிழ்த் திணிப்பை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் நடத்தினாங்க."
"ஆனா நாங்க இந்து மதத்தைத்தானே ஒழிக்கப்பாடுபட்டோம்.தமிழை இல்லையே"
"தமிழும் இந்துமதமும் இணைஞ்சு இருக்கிறதாலே தமிழை ஒழிச்சா இந்து மதத்தை ஒழிச்சுடலாம்னுதான் தமிழுக்குத் தடை விதிச்சிட்டாங்க".
"தமிழ்க்கடவுள்கள் உட்பட அத்தனை கடவுள்களையும் கடலில் தூக்கி எறிஞ்சிட்டாங்க".
"இப்போ உருதுஸ்தான்லே மொத்தமா ஒரு நூறு இந்துக்கள்தான் இருக்கோம். அதுவும் தலைமறைவா இருக்கோம் இந்த மாதிரி தாடி மீசையோடே குல்லா போட்டுக்கிட்டு. மத்தவங்க எல்லாரையும் மதம் மாத்திட்டாங்க.
மாறாதவங்களைக் கொன்னுட்டாங்க. முஸ்லிம்கள் 60% மும், கிறிஸ்தவர்கள் 39.9%மும் இருக்காங்க.மதம்மாற பயந்த மத்த பலரும் பயந்து இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துட்டாங்க".
"என்ன? இந்தியாவிலா? அப்படின்னா தமிழ்நாடு?"
"தமிழ்நாடுன்னு சொல்லாதீங்க. உருதுஸ்தான். இப்ப உருதுஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சி தனிநாடு ஆயிட்டுது."
"அடா,அடா, கேட்கவே
இனிமையாக
இருக்கிறதே. அன்று நாங்கள் தனித் திராவிட நாடு கேட்டோம். மிரட்டினார்கள். வீர திராவிட பரம்பரையில் வந்த நாங்கள் எங்கள் வீரத்திற்கு சோதனை வந்த நேரத்தில் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிட உடமையடா என்று பாட்டுப் பாடியபடி எங்கள் கோரிக்கைக்கு ஓய்வு கொடுத்து எங்கள் வீரத்தை எங்களைத் திருப்பி அடிக்காத இங்கிருந்த பார்ப்பனர்கள் மீது காட்டி, அவர்களை ஒரு வழியாக ஒன்றும் இல்லாமல் செய்து வெற்றிக் கொடி நாட்டினோம். சரி. இந்து மத பண்டிகைகளை எல்லாம் ஒழிச்சிட்டாங்களா?"
"இந்துக்களையே மொத்தமா ஒழிச்ச அப்புறம் இந்துப்பண்டிகை எம்மாத்திரம்?"
"நல்ல காரியம்தான் பண்ணி இருக்காங்க. பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி இதெல்லாம் ஒழிஞ்சி இருக்குமே. நாங்க ஒழிக்கணும்னு நெனச்சோம். அதை இவங்க ஒழிச்சிட்டாங்களா? நல்லதுதான்."
"அதுமாத்திரம் இல்லீங்க. பொங்கலையும் ஒழிச்சிட்டாங்க."
"என்ன பொங்கலையுமா?"
"கடவுள் இல்லேன்னு சொல்றவங்களுக்குத் தூக்குத் தண்டனை இப்ப எல்லாம்."
"அப்படியா? சரி. பொங்கலை ஒழிச்சா, புது வருடம் எப்படி ஆரம்பம் ஆகும்?"
"அதெல்லாம் இப்ப பழைய கதை. புது வருஷம் இப்ப ஹிஜிரி யிலே இருந்துதான் ஆரம்பம்."
"நான் கண்டுபிடிச்ச புது வருஷமும் போச்சா?" கருணாநிதி கதறுகிறார்.
"என்னங்க நாமொன்று நினைக்க ....
இவங்க ஒண்ணு நெனச்சுட்டாங்க?"
"ஏதோ,திராவிடகழகம், திமுக, கம்யூனிஸ்டுகள் இப்படி ஒரு உருப்படாத கும்பலெல்லாம் ஒண்ணு சேர்ந்து தமிழகத்தில் இந்து மதத்தை ஒழிச்சிட்டாங்க. தமிழங்களா இருந்தவங்க எல்லாம் தங்களோடே பாரம்பரிய கொண்டாட்டங்களெல்லாம் முட்டாள்தனமானவை சொல்லிக் கொண்டாடறதை அரசாங்கமும் இந்த நாட்டின் மதச் சட்டமும் தடை விதிச்சிடுத்து."
"ஆமாம். எங்க உயிர் மூச்சான திருக்குறள் எப்படி இருக்கு?"
"தமிழிலே இப்ப அதைத் தடை செஞ்சுட்டாங்க. அதிலே இருந்து ஒரு 300 குறள் வரையிலும் அதெல்லாம் இந்து ஃபகீர்கள் செஞ்ச இடைச்செருகல்னு சொல்லி எடுத்துட்டாங்க.
திருக்குறளை உருதுலேதான் வள்ளுவர் எழுதினார்னு முஸ்லிம்களும், ஆங்கிலத்திலே தான் எழுதினார்னு கிறுஸ்தவக் கும்பலும் சொல்றாங்க.
திருவள்ளுவர் ஒரு நபியின் தூதர்னு முஸ்லீம்களும்அவர் ஏசுவின் சீடர்னு கிறுஸ்தவங்களும் சரித்திரத்தைத் தங்களுக்கு ஏத்தபடி மாத்தி எழுதிக்கிட்டாட்டாங்க. இப்ப குழந்தைங்க எல்லாம் இதைத்தான் படிக்கிறாங்க.அவர் எழுதிய திருக்குறள் பைபிளிலிருந்து காப்பி அடிக்கபட்டதுன்னும், இல்லை குரானிலிருந்து திருடப்பட்டதுன்னும் ஒரு சர்ச்சை தோன்றி இருக்கு".
"அங்கே என்ன தகராறு?"
"அதுவா? முந்தி எல்லாம் இந்து முஸ்லிம் சண்டை மாதிரி இப்ப முஸ்லிம்களுக்கும், கிறுஸ்தவர்களுக்கும் அடிக்கடி இந்த மாதிரி சண்டை வருது. இஸ்லாமுலே இருந்துதான் உலக நாகரிகம் தோணிச்சின்னு முஸ்லிம்களும், கிறுஸ்துவத்திலே இருந்துதான்னு கிறிஸ்தவர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. இது எதிலே போய் முடியுமோன்னு தெரியல்லே. ஆனா அந்தத் திராவிடக் கழகங்களையும் அந்த போலி மதச்சார்பின்மையையும் ஆரம்பிச்ச அந்த மோசக்காரக் கும்பல்கள் மட்டும் இப்ப என் கையிலே கிடைச்சா நான் சும்மா விடமாட்டேன்" ஆவேசமாக உறுமுகிறார்.
அண்ணாவின் ஆவியும், கருணாநிதியின் ஆவியும் மாயமாய் மறைந்து விட்டன. இன்னும் அங்கே நிற்க அவர்களுக்குப் பைத்தியமா என்ன?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...