மத்திய நிதி அமைச்சருக்கு ஒரு நடுத்தர வர்க்க சாதாரண ஆணின் பரிந்துரை.
*பட்ஜெட்டில் இதையும் சேர்த்தால் நன்றாயிருக்கும், 2023 புது வருடமும் புதுமையாக இருக்கும்.*
அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவை தான் போகனும். அடிக்கடி போனால் 10% வரி !
டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !
பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ப்ளவுஸ் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் !
ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கனும் !
கட்டாத பட்டுப் புடவைக்கு 50% வரி விதிப்பு .
இனி பட்டுப் புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம் !
அம்மா மாமியார் கூட போன்ல அஞ்சு நிமிஷம் தான் பேசனும். என்ன சமையல், என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய் பில்லில் சேர்க்கப்படும் !
10 மணிக்கு மேல புருஷன் வெளியே இருந்தால், எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ணக் கூடாது. மீறி செய்தால், போன் இணைப்பு துண்டிக்கப்படும் !
புருசனோட போன் பாஸ்வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை. அதுக்கு மேல கேட்டால், அவங்க அம்மா கூட போன்ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் !
கணவன் மனைவி இருவரும் துணி வைக்க ஒரே பீரோ தான் யூஸ் செய்யனும். தனி பீரோ யூஸ் செய்தால் 5% வரி உண்டு !
மாமியார் எம்புட்டு தொல்லை கொடுத்தாலும் அதை புருஷன் கிட்ட குறையா சொல்லாமல் அவர்களே அதை சந்திக்க வேண்டும் !
சமையலில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கண்டிப்பாக சாம்பாருக்கு, ரசத்துக்கு வித்தியாசம் தெரிய வேண்டும் !
எக்ஸ்ட்ரா பணம் இருந்தால் சேமிக்க வேண்டும். உடனே பேன்சி வளையல் தொங்கட்டா வாங்க கூடாது !
புருஷன் வழி சொந்தங்கள் வந்தால், வீட்ல சமையலுக்கு சாமான் இல்லைன்னு அடிக்கடி புருஷன கடைக்கு அனுப்ப கூடாது. கடைக்கு போற வழியில இது சொல்ல மறந்துட்டேனு அது வாங்கிட்டு வாங்கன்னு கடைக்கு போற வரை லிஸ்ட் சொல்ல கூடாது .
அக்கா, தங்கச்சிகளுக்கு உதவி பண்ணா அதெல்லாம் தேவை இல்லைன்னு தடை போடக் கூடாது !
உப்புமா முற்றிலும் தடை செய்யப்படும். மீறி சமைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் !
மொத்தத்தில் இதை நடைமுறைப்படுத்தினால் சிறந்த பட்ஜெட்டாகவும் 2023 சிறந்த ஆண்டாக இருக்கும்.
No comments:
Post a Comment