நான் ஒரு இந்து ஆனால் நான் கீதை படித்தது இல்லை
இருந்தாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது
நான் கல்,மரம்,சிலை எதை வேண்டும் என்றாலும் கும்பிடுவேன் அது என் நம்பிக்கை ஏனென்றால் என் மூதாதையர் எனக்கு கூறியது கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் இதை நான் இன்று வரை நம்புகிறேன்
அதே நேரம் என்னுடைய நம்பிக்கையை கேள்வி கேட்டும் உரிமை உனக்கு நான் தரவில்லை
ஒரு வேளை நீ நாத்திகன் என்றால் நாத்திகத்திற்கு மதம் உண்டா மதம் இல்லையென்றால் நான் பிறந்த மதத்தைத்தான் விமர்சிக்க முடியும் என்ற வார்த்தை ஏன்???
அப்படி நாத்திகத்திற்கு மதம் இல்லையென்றால் என் மதம் மட்டும் ஏன் விமர்சனத்திற்கும் ஆய்விற்கும் உட்படுத்தப்படுகிறது???
சரி நாம் எல்லாம் தமிழர்கள் இந்துக்கள் இல்லை தமிழர்களின் வழிபாடு குலதெய்வ வழிபாடு மட்டும் தான் என்கிறீர்கள் சரி உங்கள் கருத்துப்படியே நான் இந்து இல்லை தமிழனாக இருந்து குலதெய்வ வழிபாட்டை மட்டும் நான் ஏற்றுக் கொள்ள தயார் நான் எனது குலதெய்வத்தை மட்டும் வழிபட்டு உங்கள் கருத்துப்படி புகுத்தப்பட்ட தெய்வங்களையும் மதத்தையும் நான் புறந்தள்ளி விட்டேன் ஆதலால் நான் இப்போ தமிழர் ஆகிவிட்டேன்!!!
இப்போ எனது கேள்வி தமிழ்நாட்டில் குலதெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத மீதம் இருப்பவர்கள் மற்ற மார்க்கத்தினர் வெளிநாட்டில் உள்ள சாமியை கும்பிடுபவர்கள் அவர்கள் தமிழர்களா இல்லையா அவர்களின் மார்க்கம் திணிக்கப்பட்டாத இல்லை அந்த மார்க்கங்கள் மட்டும் தமிழர்களின் பண்பாட்டு மார்க்கமா???
இப்பொழுது நீங்கள் மற்ற மார்க்கத்தினரை எதிர்த்து தமிழர் பண்பாட்டு முறைக்கு மாறச் சொல்லி அவர்களின் மார்க்கத்தையும் அவர்களின் மூட நம்பிக்கைகளையும் அவர்களின் வழிபாட்டு முறயையும் அவர்களின் கடவுள்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி இப்பொழுது மேடைகளில் விமர்சிப்பது போல் விமர்சிப்பீர்களா??? இல்லை மறுபடியும் குலதெய்வ வழிபாட்டை மட்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவீர்களா???
இனிய போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment