இதுக்கு அந்த அரிசி மூட்டை கோடவுன்லயே இருந்திருக்கலாம்! இப்ப பாரு ஆளுநர் விலக வேண்டும்கற முடிவை ஆளுநருக்கே அனுப்பி, அதை ஆளுநரே பரிசீலிக்கற மாதிரி ஆகிடுச்சு!
இப்ப நீ என்ன பண்ணுவே? நாங்க கொடுத்த லெட்டருக்கு பதில் என்னன்னு ஜனாதிபதியைக் கேட்பாய்!
அவங்க என்ன சொல்லுவாங்க?
ஆளுநருக்கு அனுப்பியிருக்கேன் - அவர் இப்படி ஒரு கடிதம் வந்ததா ACKNOWLEDGEMENT அனுப்பி இருக்காரு - அப்படிப்பாங்க அந்த அம்மா!
நீ என்ன பண்ணுவே? பதில் என்னன்னு கேட்டுச் சொல்லுங்கம்பே!
அது என் வேலை இல்லை தம்பி - நீ கொடுத்த லெட்டரை அவருக்கு அனுப்பிட்டேன் - அவரும் இப்படி ஒரு கடிதாசி வந்ததா ACKNOWLEDEGEMENT பண்ணிட்டாரு! பதில் எப்போ எழுதுவாருன்னு என்னாண்ட கேட்டால் எப்படிம்பாங்க!
நீ என்ன பண்ணுவே? கிண்டி ராஜ்பவனுக்கு ஓடி வருவே!
"ஹலோ மிஸ்டர் ரவி? நாங்க ஜனாதிபதிகிட்ட கொடுத்த லெட்டர் உங்களாண்ட வந்திச்சாமே?"
"ஆமா! அதுக்கு என்ன இப்போ?"
"அதை நீங்க என்னா பண்ணீங்க?"
"ACKNOWLEDGE பண்ணினேன்!"
"அதுசரி ரிப்ளை எப்போ பண்ணுவீங்க?"
"நீ லெட்டரை யாரண்ட கொடுத்தே?"
"ஜனாதிபதி முர்மு அம்மா கிட்ட!"
"அப்ப அவங்கதானே ரிப்ளை எப்ப பண்ணுவேனு என்னை கேட்க முடியும்? நீ அவங்க கையில் கடுதாசியை கொடுத்துட்டு என்னாண்ட எப்ப பதில் போடுவேனு கேட்கிறே? காமன் சென்ஸ் இல்லை உனக்கு?
"சரி, அந்த லெட்டரை என்னதான் பண்ணீங்க?"
"எந்த லெட்டர்?"
"நாங்க ஜனாதிபதி கிட்ட கொடுத்த லெட்டர்?"
"அதான் சொன்னேனே ACKNOWLEDGE பண்ணினேன்!"
"பதில் எப்போ தருவீங்க?"
"அதை அந்த லெட்டரை எனக்கு அனுப்பின ஜனாதிபதி இல்லே கேட்கணும்?"
(திராவிடமாடல் கோஷ்டி மயக்கம் போட்டு விழ...)
No comments:
Post a Comment