17/01/2023 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
கிரக பெயர்ச்சி,குறிப்பாக சனி பகவானின் கோச்சார பெயர்ச்சி குறித்து சமூக வளைத்தளங்களில் பீதியடையச்செய்யும்,பரபரப்பு செய்தி/வதந்தி குறித்து ஒரு சிறிய விளக்கம்:
எந்த கோச்சார கிரக பெயர்ச்சிகளும் பெரிய அளவில் நன்மையோ அல்லது தீமையோ செய்யாது.ஆகவே அநாவசிய அச்சங்களை கைவிடுங்கள்.
ஜனன ஜாதகம் நன்றாகயில்லை என்றால்.அதாவது லக்னாதிபதி வலுப்பெறவில்லை என்றால் மத்தளத்திற்க்கு இரு பக்கமும் அடிப்போல நம்மை கோச்சாரமும்/ஜாதகமும் சேர்ந்து அடித்து தொல்லை கொடுக்கும்.
கும்ப ராசிக்கு ஜென்ம சனி/கடக ராசிக்கு அஷ்டம சனி இவ்விரு ராசிகாரர்களும் சற்றே கூடுதல் கவனத்துடன் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து கடந்துவிடலாம்.
சென்னை வாசிகள்,சென்னை பொழிச்சலூரில் உள்ள ,தொண்டை மண்டல நவக்கிரக ஸ்தலத்தில் சனிபகவானின் ஸ்தலமான அகத்தீஸ்வரர் கோவிலுக்கு முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வருவது பெருமளவில் பயன் சேர்க்கும்.
சனிபகவான் தீய கிரகமல்ல.மற்ற எல்லா கிரகங்களைப்போலவே இவரும் நன்மை/தீமை இரண்டையும் கொடுப்பாா்.
சொல்லப்போனால் மற்ற கிரகங்களை காட்டிலும் அதிகமாக நல்லது செய்யக்கூடிய கிரகம் சனிபகவான்.
"குரு கொடுப்பின் சனி தடுப்பர்,சனி கொடுப்பின் யாா் தடுப்பர்" என்ற ஜோதிட சொல் ஒன்று உண்டு.
குரு தசையில் தடைப்பட்ட செல்வம்,பின்வரும் சனி தசையில் நம்மை சேரும்.
ரிஷப,மிதுன,கன்னி,துலாம்,மகர,கும்ப லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் லக்ன சுபர்.இவர்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் சனிபகவானால் எந்த தொல்லையும் ஏற்படாது.
ஜனன ஜாதகத்தில் சனிபகவான் நேரடி வலுப்பெறாமல் மறைமுக வலுப்பெறுவது சிறப்பு.
கெளலவம்,சகுனி இவைகளை தங்களது ஜனன கரணங்களாக பெற்றவர்கள்,விஷ்கம்பம்,கண்டம்,பரீகம் இவைகளை தங்களது ஜனன நித்ய நாம யோகங்களாக பெற்றவர்களுக்கும்(இவர்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும்) சனிபகவான்/சனி தசை எல்லா நன்மைகளையும் செய்வாா்.
ஆகவே வளைத்தளத்தில் கண்டவற்றை படித்து/பாா்த்து விட்டு அநாவசிய கவலைக்கொள்ள வேண்டாம்.
நன்றி.
No comments:
Post a Comment