Saturday, January 14, 2023

இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், நிச்சயமாக அந்த தங்கம் உங்களோடு நிரந்தரமாக இருக்காது. ஆசை ஆசையாக வாங்கிய தங்கம், உங்கள் கையை விட்டு போக நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான்.

 ஆசை ஆசையாக ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது என்பதே இந்த காலத்தில் ரொம்பவும் கஷ்டமான விஷயமாக மாறிவிட்டது. ஏனென்றால் தங்கத்தின் விலை எங்கேயோ சென்றுவிட்டது. அப்படி இருக்கும் போது ஒரு தங்க நகை வாங்குவதாக இருந்தால் அந்த நகையை வாங்க செல்லும்போது நல்ல நேரம் பார்த்து, நல்ல நாள் பார்த்து, நல்ல கிழமை பார்த்து வாங்குவது தான் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கண்ணை மூடிக்கொண்டு எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் தங்கம் வாங்க செல்லாதீங்க. தங்கத்தை எந்த நேரத்தில் வாங்கினால் நன்மை தரும், எந்த நேரத்தில் தங்கத்தை வாங்கக் கூடாது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்: சஷ்டி, ஏகாதேசி, தசமி, பஞ்சமி, பௌர்ணமி, இந்த திதிகள் வரக்கூடிய நாட்களில் புதுசாக தங்கம் வாங்கலாம். (இந்த திதிகளோடு சேர்த்து ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை வந்தால் அந்த கிழமைகளில் தங்கம் நிச்சயமாக வாங்க கூடாது.) தங்கம் வாங்க கூடிய நேரத்தில் ராகு காலம் எமகண்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காலண்டரை பார்த்தாலே தெரியும் நல்ல நேரம் எப்போது கொடுக்கப்பட்டுள்ளதோ, அந்த நேரத்தை பயன்படுத்தி தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக மாலை 6 மணிக்கு பிறகு சூரியன் அஸ்தமமான பிறகு தங்கம் வாங்கக் கூடாது.  நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வாங்கிய தங்க நகை உங்களுடைய வீட்டில் இப்போது எப்படி இருக்கிறது என்பதை. நிச்சயமாக சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வாங்கிய தங்கம் நம்முடைய வீட்டில் நீண்ட நாட்களுக்கு இருக்காது. அடமானத்திற்கு சென்று விடும். அப்படி இல்லை என்றால் உடைந்து திரும்பவும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி இல்லை என்றால் தொலைந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. ஆகவே சூரியன் இருக்கும்போதே மாலை 6 மணிக்கு முன்பு தங்கத்தை வாங்குவது சிறப்பு. பெரும்பாலும் நகை கடைகளில் மாலை நேரத்திற்கு பிறகு தான், அதாவது இரவு நேரத்தில் தான் கூட்டம் அலைமோதுகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், அது தவறு. எல்லோரும் செய்யும் தவறை நீங்கள் செய்யாதீங்க.  கூடுமானவரை மாலை 6 மணிக்கு முன்பு தங்கத்தை வாங்கி கொள்ளுங்கள். குளிகை நேரத்தில் நாம் வாங்கக்கூடிய தங்கம், மீண்டும் மீண்டும் தங்கம் வாங்கக் கூடிய யோகத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். ஆனாலும் தாலி சரடு, மாங்கல்யம், மெட்டி இப்படிப்பட்ட பொருட்களை குளிகை நேரத்தில் வாங்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வாங்கிய தங்கம் நிலையாக நம்முடனே இருக்க வேண்டும் என்றால் சனிக்கிழமை அன்று புதுசாக வாங்கிய நகைகளை அணிந்து கொள்வது சிறப்பு. சனிக்கிழமை தங்கம் வாங்கலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. சனிக்கிழமையில் கூட புதுசாக தங்க நகைகள் வாங்கலாம். தவறு கிடையாது.  மாலை 6:00 மணிக்கு பிறகு வெள்ளிப் பொருட்களை வாங்கலாம். சந்திர உதயமான பிறகு சந்திரனுக்கு சொந்தமான வெள்ளிப் பொருட்களை வாங்குவதன் மூலம் நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...