ஒரு பெரிய போலீஸ் அதிகாரி மிகக் கண்டிப்பானவர் ஐந்து ஆண்டுகள் விடுமுறையே எடுக்காமல் பணியாற்றும்
வீரமிக்க மனிதர் அவர்
அவரிடம். என்னைப் போன்று ஒரு அப்பாவி கான்ஸ்டபிள்.. ராமன்
ராமனுக்கு எப்படியாவது இவரிடம் ஒரு வாரம் லீவு வாங்கி மனைவி குழந்தைகளோடு இருக்க வேண்டும் என்று ஆசை.. இருந்தாலும் லீவு கேட்பதற்கு பயம்.. காரணம்
அவ்வளவு பெரிய அதிகாரியே ஐந்து ஆண்டுகளாக விடுமுறை எடுக்க வில்லை..
இருந்தாலும் அன்று மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
ஐயா. எனக்கு ஒரு வாரம் லீவு வேணும் ஐயா.. உடனே அவர். ஒரு வாரமா
எதுக்குயா.. என்று அதட்டலாக கேட்கிறார்
ராமனிடம்.. அதற்கு ராமன். எங்க மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை
பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகவே தான். என்று கேட்க.. சற்று நேரம் யோசித்த அந்த அதிகாரி
சரி எடுத்துக்கொள். அம்மா என்றாலும்
பரவாயில்லை.. மாமியார் என்று சொல்கிறாயே... அதனால் நல்லபடியாக பார்த்துக் கொள்.. என்று கூறி அனுப்புகிறார்.. இவருக்கு ஒரே சந்தோசம்... ராதா ராதா என்று
கூப்பிட்டுக் கொண்டே வீட்டுக்குள் போகிறார்
அவர் மனைவி என்னங்க இவ்வளவு மகிழ்ச்சி என்று கேட்க
ஒரு வாரம் லீவு கிடைத்துவிட்டது
என்கிறார்.. அப்படியா. எப்படிங்க கொடுத்தாரு. உங்கள் உயர் அதிகாரி
என்று ராதா கேட்கிறாள்..
உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னேன். கொடுத்து விட்டார் என்கிறார்
உடனே ராதா சற்று முறைப்பாக
நீங்க சொன்ன நேரமோ என்னவோ
உண்மையிலேயே எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லையாம்
இப்போதுதான் போன் வந்தது
சரி சரி. நாளை நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்.. என்று கூறுகிறார்
உடனே ராமனுக்கு இன்னமும் மகிழ்ச்சி
ராதா போய்விட்டாள் நண்பர்களை அழைத்து.. வீட்டில் குஜாலாக இருக்கலாம் என்று.. ஒரே சந்தோசம்
தூங்கும் நேரம் வந்தது.. நடுவில் குழந்தை. ராமன் ஒருபுறம் ராதா ஒருபுறம்
தூங்கிக் கொண்டிருந்தார்கள்
ராதா.. ஏங்க ஏங்க. என்று மெதுவாக தூங்கிக்கொண்டிருந்த ராமனை எழுப்புகிறார்.. உடனே ராமன்
பேசாமல் தூங்க மாட்டே நாளை பார்த்துக் கொள்ளலாம்.. என்கிறான்
உடனே ராதா. ஐயோ அதுக்கு இல்லீங்க
நம்ம ராணி. பெட்டிலேயே. உச்சா போய் விடுவாள்.. அவளைப்பார்த்து ரூமுக்கு கூட்டிட்டு போங்க. என்கிறாள்
எப்பவும் நீ தானே கூட்டிட்டு போவ
என்கிறார் ராமன்
சும்மாதானே இருக்கீங்க. இது கூட செய்யக்கூடாதா. என்று சொல்கிறார் ராதா.. உடனே அதையும் செய்கிறான்
ராமன்
மீண்டும் அசந்து தூங்குகிறார்கள்
திடீரென்று ஒரு குரல் ஜன்னல் வழியே
ராதா ராதா. தண்ணி லாரி வந்திடுச்சு. சீக்கிரம் வா என்று.. சத்தம் போடுகிறார்
திடுக்கிட்ட ராதா.. முந்தானையை சரி செய்து கொண்டு.. அவிழ்ந்த முடியை
அல்லி முடித்துக்கொண்டு
ஏங்க ஏங்க. சீக்கிரம் எந்திரிங்க
என்று ராமனை. உசுப்பு கிறாள்
எதுக்குடி என்று ராமன் கேட்க
தண்ணி லாரி வந்திடுச்சு. நீங்க குடத்தில் பிடிச்சு பிடிச்சு வையுங்க
நான் தூக்கிக் கொண்டு வருகிறேன் என்று கூற.. எப்பவும் நீ தானடி செய்வ
என்று ராமன் சொல்ல
சும்மாதானே இருக்கீங்க. இத கூட செய்ய மாட்டீங்களா என்று.. இழுத்துக் கொண்டு போகிறாள். ஒரு வழியா தண்ணி பிடித்து முடிந்தது. பொழுதும் விடிந்தது
ஏங்க. ரொம்ப நாளா. வெங்காய சட்னி
கேட்டீங்க இல்ல இன்னைக்கு செய்யவா
என்று ராதா கேட்க.. மகிழ்ச்சியில்
அப்பாடா இன்னைக்காவது செய்
என்று சொல்லி முடிப்பதற்குள்
அவன் முன்னாடி.. ஒரு தட்டு நிறைய
பூண்டும் வெங்காயமும்
கொண்டு வந்து வைக்கிறாள் ராதா
பயந்து போன ராமன்.. இதை ஏன் என் முன்னாடி வைக்கிற.. என்று கேட்க
சும்மாதான் இருக்கீங்க.. இந்த உதவி கூட செய்ய மாட்டீங்களா. என்று சொல்கிறாள்
உடனே ராமனுக்கு புரிந்து விட்டது
ஒரு நாளிலேயே சும்மா தான இருக்கீங்க
சும்மாதானே இருக்கீங்க.. என்று சொல்லிச் சொல்லி.. இத்தனை வேலை வைக்கிறாள்
இன்னும் ஒரு வாரம் இருந்தா.. இவள்
சேலையை துவைக்க பாத்திரம் கழுவ சொன்னாலும் சொல்லிவிடுவாள்
எப்படியாவது தப்பிக்க என்ன வழி என்று
யோசிக்கிறான்
திடீரென்று.. ராதா ராதா என்று கூப்பிடுகிறான்.. மேல அதிகாரியிடமிருந்து.. வராத போன்
வந்தது போல் நடிக்கிறான்
ஏதோ அவசர வேலையாம் உடனே வரச்சொன்னார் மேலதிகாரி
லீவை கேன்சல் செய்துவிட்டாராம்
நான் உடனே போகிறேன் என்று
போலீஸ் உடையை மாற்றிக்கொண்டு
போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிவிட்டான்
அங்கே மேலதிகாரி இருந்தார்
என்னைய ராமா.
என்ன ஒரு வாரம் லீவு கேட்டே
இன்னைக்கே வந்திட்டே
என்று கேட்கிறார்
நடந்த விஷயத்தை எல்லாம் அவரிடம் சொல்கிறான். ராமன்
அதைக்கேட்டு சிரிக்கிறார் உயர் அதிகாரி
என்ன சார் என் மனைவியின் கொடுமையை சொல்கிறேன்
நீங்க சிரிக்கிறீங்க. என்று ராமன் கேட்க
அந்த அதிகாரி சொல்கிறார்
இப்போது தெரிகிறதா உனக்கு
நான் ஏன் ஐந்தாண்டுகள்
விடுமுறை எடுக்காமல்
வேலைக்கு வருகிறேன் என்று
அதனாலதான்.
No comments:
Post a Comment