Drohkaal இந்தி படத்தின் ரீமேக் குருதிப்புனல் (1995) முதலில் இப்படத்தின் தலைப்பு துரோகி என்று தான் வைத்தார்கள் பிறகு குருதிப்புனல் என்று மாறியது.
இந்த படம் எப்போதும் எனக்கு வியப்பாக தான் இருக்கும், அதுவரை போலீஸ் படங்களில் வரும் ஹீரோ தலைமுடி நீளமாகவும் போலீஸ் உடையில் அந்த நீள தலைமுடி கம்பீரத்தை குறைத்தது இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் உயர் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக விளங்கிய படம்.
சத்யமான வார்த்தைகளுக்கு என்றும் உயிர்ப்புடன் இருக்கும் அதற்கு உதாரணம் தான் இந்த வசனம் வீரம்னா என்ன தெரியுமா, பயம் இல்லாத மாதிரி நடக்கிறது, காலத்திற்கும் நிற்கும் வசனம்.
படத்தில் முத்த காட்சிகள், குளித்து விட்டு ஜட்டியை கழட்டி போடும் காட்சிகள் என்று பல இந்த படத்தில் இருந்தாலும் violence Erotic காட்சிகள் படத்தில் இருக்கும் அந்த காட்சியை பார்த்துவிட்டு ரசித்தவர்கள் ஏராளம், இந்தி மொழியில் இந்த காட்சி இருந்தாலும் தமிழ் அளவுக்கு violence erotic இல்லை என்று தான் சொல்லுவேன் ஒரு வேலை இந்தியில் இருப்பது போல எடுத்து இருந்தால் மக்களுக்கு கோபம் அந்த கதாபாத்திரத்தின் மீது வந்து இருக்கும், தமிழில் அந்த காட்சி சற்று வேறு மாதிரி எடுத்ததால் அந்த கதாபாத்திரத்தின் மீது பொறாமை தான் பல பேருக்கு வந்தது.
இந்த படத்தில் நிழல்கள் ரவி அவர்கள் Ak 47 துப்பாக்கியை கார் பின்புறத்தில் இருந்து எடுக்கும் போது ஆச்சரியம் தான், அதேபோல் ராக்கெட் லாஞ்சர் உபயோகம் செய்யும் பழைய சிப்பாய் அஜய் ரத்தனம் செய்து இருப்பார் சாதாரணமாக இருக்கும் கதாபாத்திரத்தின் கைகளில் இவ்வளவு வெயிட்டான பொருட்கள்.
ஒரு காட்சியில் குழந்தைகள் மீது தவறுதலாக குறி வைக்கப்பட்டு கொல்லப்படுவார்கள் அதற்கு முன் அந்த போராளிகள் ஒரு நொடி வருத்தம் படுவது போன்ற காட்சிகள் இருக்கும் அந்த சம்பவத்திற்கு பிறகு கமல்ஹாசன் அவர்கள் நாசரை பார்த்து உங்களோடு யுத்தம் செய்ய நாங்கள் இருக்கிறோம் அப்பாவி மக்கள் ஏன் என்று விவாதம் செய்வர், ஒட்டுமொத்த முன் பின் காட்சிகளும் அட்டகாசம்.
தமிழில் Dolby sound ல் வெளியான முதல் படம்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்
இப்போது இதுபோன்ற படங்கள் வந்தால் கொண்டாடி தீர்பார்கள் 1995ல் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெறவில்லை.
No comments:
Post a Comment