நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படிக்காத மேதை படம்பற்றி அறியாத விஜய் ரசிகர்களுக்கு வாரிசு செமயான பேமிலி பேக்கேஜ்.
ஒருகாலத்தில் சம ஹீரோவாக நடித்த சரத்குமார் இந்தப்படத்தி்ல்
அவருடைய அப்பா...
விஜயைவிட ஆறு வயது குறைந்த ஷாம் இந்தப்படத்தில் அவரின்
அண்ணன்....
அடுத்த படத்தில் அப்பாவாக நடிக்க வாய்ப்பு
கிடைக்கும்...
கதாநாயகிக்கு பெரிய நடிப்பைகாட்ட வாய்ப்பில்லை...
முழுத்தொடை தெரிய உரித்த கோழிகணக்காக
வந்து போகிறார்...பெரிய பட்ஜெட் படம்.
இதுவரை இப்படி ஒரு எந்த ட்விஸ்ட்டும் இல்லாமல் தட்டையான இடைவேளை
விஜய் படத்தில் வந்ததே இல்லை...
05 நிமிஷத்தில் ஆட்சியே மாறும் என்ற அரசியல் பஞ்ச் வசனம் வரும்போது
ரசிகர்கள் அல்லாத மக்களும் கைதட்டுகிறார்கள்...
இனி பொது நிகழ்ச்சிகளில்
வெள்ளை வேஷ்ட்டி வெள்ளை சட்டையில்
வரவேண்டும்.
மக்கள் எதிர்பார்ப்பு இது!
யுவான் சுவாங் காலத்திலிருந்து பார்த்துப்பார்த்து அலுத்துப்போன அரதப்பழசான கதை..
விஜய்யின் நடனம் தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகும்
நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது...
கலைக்கு மொழி இல்லை என்றாலும் கூட தளபதி இனி தமிழ் இயக்குனர்கள்
படத்தில் பணிபுரிவதே நல்லது.
ஓவர்சீஸ் வியாபாரம் என சப்பைக்கட்டு கட்டினாலும்
தமிழ்கலாச்சார அஸ்திவாரம் ஸட்ராங்காக
இல்லாதவர்களால்
விஜய் வீணடிக்கப்படுகிறார்...
வாரிசு...
ஏகமாய் எதிர்பார்த்தேன்.
வாரிவுட்ருச்சு!
No comments:
Post a Comment