திமுகவின் சொத்து சாம்ராஜ்யம் இந்தியா முழுக்க உள்ளது. இந்தியாவைக் கடந்து உலகம் முழுக்க உள்ளது. இவர்களை அழிக்கவே முடியாது. யாரும் எதிர்க்கவும் முடியாது. என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக என் தாய் வரைக்கும் இழுத்து அசிங்கப்படுத்துகின்றார்கள்
இன்னமும் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார். அப்போது நானே அவரை நம்பினேன். பின்னாளில் சேப்பாக்கம் தொகுதியில் ப்ளேபாய் நிற்க எத்தனை சித்து வேலைகள் நடந்தது? எவன் எவனோடு கூட்டணி வைத்து குஷ்பு அவர்களை த்ராட்டில் விட்டார்கள் என்பதனை அறிந்து இரண்டுமே தமிழக மக்களின் சொத்துக்களை திருடித் தின்று பழகிய சொறி நாய்கள் தான் என்பதாக முடிவுக்கு வந்தேன்.
நேற்று அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விட்டு இன்று சந்தித்ததோடு நேற்று பேசியதன் தொடர்ச்சியாகப் பேசினார். ஆனால் விரிவாகப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிலவற்றை இவர் ஏன் பேசாமல் தவிர்த்தார்? தவிர்க்கின்றார்? என்று பலமுறை யோசித்துள்ளேன். வேறொரு சமயத்தில் அதனை வேறு விதமாக வெளிக்காட்டுவார். நமக்குள் இருக்கும் கோபம், ஆற்றாமை, வேகம் போன்ற அனைத்தையும் அவர் ப்ரேக் போட்டு மெதுவாக மெதுவாக நகர்த்துவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும் என் பொறுமை இழப்பு பலமுறை எனக்கு மன உளைச்சலை உருவாக்கியுள்ளது.
ஆனால் அண்ணாமலை அவர்கள் இன்று பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பு வெடி சரவெடி என்பது போலவே இருந்தது. (10 out of 10)
சில விசயங்களைப் பற்றிப் பேசுவோம்.
இலங்கை பிரச்சனை, எல்லை தாண்டிய மீனவர் பிரச்சனை, இலங்கை பிரச்சனை, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை இன்னமும் மீட்டெடுக்க முடியாமல் இருப்பது என்று இதுபோன்ற தமிழக வளர்ச்சி அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இங்குள்ள பலரும் இருக்கின்றார்கள். பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.
அண்ணாமலை அவர்கள் டிஆர் பாலு வைத்துள்ள மீன்பிடி கப்பல் சார்ந்த நிறுவனம் பற்றி லேசாகப் பேசினார். அதனைப் பற்றி புத்தகம் எழுதும் அளவுக்கு விசயங்கள் உள்ளது. யாராவது பேச மாட்டார்களா? எழுத மாட்டார்களா? என்று காத்துக் கொண்டு இருக்கின்றேன். ப. சிதம்பரம் பற்றி இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டு இருக்கின்றது. ஆபாச ராசா பற்றி நாற்றமடிக்கும் அளவுக்கு விசயம் வந்த போதிலும் கொள்ளையடித்த பணம் எங்கங்கே பதுக்கப்பட்டது பற்றி இப்போது தான் தோண்டத் தொடங்கியுள்ளனர். ஆனால் பாலுத் தேவர் குறித்து கனிமொழி பற்றி எங்கேயாவது படித்தது உண்டா?
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை அவர்கள் பலவற்றை லேசாக கோடிட்டுக் காட்டியுள்ளார். எல்லாமே பாதாள குழி சார்ந்த விசயங்கள். பத்திரிக்கைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றவர்களுக்குப் புரியும்.
ஆனால் இன்று அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு என்பது உள்நாட்டுத் தீவிரவாதிகளுக்குப் பயந்து இருக்காது என்பது என் அனுமானம். திருக்குவளை கும்பலின் வண்டாவாளை அடுத்தடுத்து தேர்தல் நெருங்க நெருங்கத் தொடப் போகின்றார். அல்லது உத்தரவு வந்துள்ளது. அல்லது பெரிய சம்பவம் நடக்க உள்ளது என்பதாக யூகிக்கின்றேன்.
காரணம் புல்லட் கார் பயணம்.
மாதம் 16 லட்சம் செலவு.
அருகே நெருங்க முடியாது.
செக்யூரிட்டி கிளியரன்ஸ் அதன் பிறகே நகர முடியும்.
போன்ற பல டைட் டான சமாச்சாரத்திற்குப் பின்னால் ஏதோவொரு ஆப்பு டைட் ஆக சொருகப்படும் என்றே நம்புகின்றேன்.
No comments:
Post a Comment