Friday, January 13, 2023

வீட்டில் பூஜை செய்யும் பொழுது கவனிக்க மறக்க கூடாத 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா? தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்!*

 *

🔯வீட்டில் பூஜை செய்யும் பொழுது சில சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பது முறையாக இருக்கிறது. அந்த வகையில் இந்த சில விஷயங்களை நாம் எக்காரணம் கொண்டும் கவனிக்காமல் இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரங்கள். அப்படியான சில விஷயங்கள் நமக்கு தெய்வ குற்றத்தை ஏற்படுத்தி விடுமாம். நம் வீட்டின் பூஜை அறையில் கவனிக்க மறக்க கூடாத 5 விஷயங்கள் என்னென்ன? என்பதை தொடர்ந்து இந்த பக்தி பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
🔯பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது எப்பொழுதும் நாம் தெய்வ படங்களுக்கு பூக்களை வைத்து அலங்கரிப்போம். இப்படி பூக்கள் சூடும் பொழுது அல்லது மாலை போடும் பொழுது கடவுளுடைய முகம் மற்றும் பாதம் எக்காரணம் கொண்டும் மறைக்கும்படி நாம் பூக்களை சாற்ற கூடாது. முகம், பாதம் இந்த இரண்டையும் தெரியும்படி தான் நீங்கள் மாலை சூட வேண்டும். பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது முதலில் பாதத்திலிருந்து ஆரம்பித்து தான் முகத்தை பார்க்க வேண்டும் என்கிற ஒரு ஐதீகம் உண்டு. இறைவனை தரிசிக்கும் பொழுது முகம், பாதம் இரண்டையும் தரிசிக்க மறக்க கூடாது. இதனால் அவருடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
🔯வீட்டில் பூஜை அறையில் ஏற்றப்படும் விளக்கானது முழுமையாக எரிந்து முடியும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். விரைவாக அணைய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப நீங்கள் குறைவாக எண்ணெயை ஊற்ற வேண்டும். முழுமையாக எண்ணெயை ஊற்றி விட்டால் அது தீரும் வரை நீங்கள் தீபத்தை அணைக்க கூடாது. தானாக தீபம் அணைய வேண்டுமே ஒழிய நாம் நம்முடைய அவசரத்திற்கு தீபத்தை அணைப்பது முறையல்ல! அணையும் தருவாயில் நீங்கள் பூக்களால் மெல்லமாக மலை ஏற்றலாம். வாயால் ஊதிய அணைக்கவோ, திரியை பிடித்து இழுத்து எண்ணெய்குள் தள்ளவோ கூடாது. இது தெய்வ குற்றத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
🔯பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு வைத்து வழிபடுவது மங்களகரமான விஷயங்களை நடக்க செய்யும். இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றும். இப்படி வெற்றிலை, பாக்கு வைக்கும் பொழுது வெற்றிலையுடைய நுனி பாகம் தெய்வத்திற்கு இடது புறம் இருக்குமாறு வைக்க வேண்டும். இப்படி வைக்கும் பொழுது வெற்றிலையுடைய காம்பு பகுதி சுவாமியினுடைய வலது புறம் அமையும் எனவே இப்படித்தான் நீங்கள் வெற்றிலையை வைத்து வழிபட வேண்டும் மாற்றி வைத்து வழிபடக்கூடாது.
🔯சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முதல் முதலில் பேசும் பொழுது வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பின்னர் பேச ஆரம்பிக்கலாம்.
🔯அப்படி சுப காரிய பேச்சு வார்த்தைகள் பேசும் பொழுது எள் அல்லது எண்ணெய் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது மற்றும் அதை பற்றிய எந்த விதமான பேச்சையும் பேசக்கூடாது.
இப்படி பேசினால் சுப காரியங்கள் தடைபடும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
*🔯எள் மற்றும் எண்ணெய் போன்றவை சனி பகவானுக்கு உரிய அம்சமாக இருக்கிறது எனவே சுபகாரியம் நடக்கும் இடங்களில் இது போன்ற வார்த்தைகளையும் அல்லது இந்த பொருட்களையோ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
🔯பூஜை அறையில் சிலந்தி வலை கட்டுவது அல்லது பல்லி எச்சம் இடுவது போன்ற விஷயங்களை அவ்வப் பொழுது கவனித்து சுத்தப்படுத்துங்கள்.
இதுவும் ரொம்பவே முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி நீங்கள் பூஜை அறையை பராமரித்து வந்தால், பூஜை செய்தால் பூஜை செய்த முழு பலன் கிடைக்குமாம்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...