(இன்றைய தினத்தில் மூச்சுப் பயிற்சியின் மூல ரகசியம் ஒன்றை குருநாதர் ஆசியோடு நம் அன்பர்களுக்காக சொல்கிறேன்....)
மூச்சு ஒருநாழிகைக்கு 360 சுவாசம்
ஒருநாளைக்கு 21600 சுவாசம்
மூச்சுபயிற்சியில்,
பூரகம் - மூச்சை உள்ளே இழுப்பது.
கும்பகம் - உள்வாங்கிய மூச்சை உள்ளே நிறுத்துவது.
ரேசகம் - மூச்சை வெளிவிடுவது.
எந்த நாசியில் மூச்சு ஓடுகின்றதோ
அதற்கு பூரணம் என்று பெயர்
மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. அதேபோல்தான் பாம்பு 800 வருடம், 1000 வருடம் வாழ்கின்றன.
நம்முள் சுவாசம் நடக்கும் அளவு
அமர்ந்திக்கும் போது – 12 அங்குலம்
நடக்கும் போது – 16 அங்குலம்
ஓடும் போது – 25 அங்குலம்
உறங்கும் போது – 36 அங்குலம்
உடலுறவு கொள்ளும் – 64 அங்குலம் போது
சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்
---------------------------------------------------------------------------
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்...
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்...
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்...
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்...
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்...
6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்...
5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்...
4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்...
3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்...
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்...
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்...
உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. அன்ன பாணம் நீங்கும்...
எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்
ஞாயிறு, செவ்வாய் , சனி – இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.
வெள்ளி, திங்கள் , புதன் – இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.
வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) –சந்திர கலை ஓட வேண்டும்.
அமரபட்சம் (தேய்பிறை ) – சூரிய கலை ஓட வேண்டும்.
இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.
No comments:
Post a Comment