Monday, January 16, 2023

'சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் கலையில் அண்ணாமலை இன்னும் கூடுதல் தேர்ச்சி பெறவில்லையே?' என்பது தான் என் ஆதங்கமே.

 

நேற்று தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சியை இப்போது தான் பார்த்தேன்.

அது குறித்த என் விமர்சனங்கள் இவை:

(1) நேர்காணலின் தொடக்கத்தில் அசோகவர்ஷினி தன்னை நக்கலாக அறிமுகம் செய்து கொண்டதற்கு, அண்ணாமலையும் அதே பாணியில் தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

(2) நேர்காணல் முழுதும், அண்ணாமலை இவ்வளவு குழைவாக, பணிவாக, மன்னிப்புக் கோரும் வகையில் அசோகவர்ஷினியின் கேள்விகளை ஏன் எதிர்கொண்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அது, நிகழ்ச்சியை முழுவதும் காண்பவருக்கு ஒரு தவறான 'message'-ஐத் தருவதாக இருக்கிறது. அண்ணாமலை தன் பதில்களில் இன்னும் கொஞ்சம் 'கடுமை' (aggressive posture) காட்டி இருக்க வேண்டும்.

(3) அசோகவர்ஷினியின் பாதிக்கு மேற்பட்ட கேள்விகள், அ.தி.மு.க. தொடர்பானவை. அவற்றில் ஒன்றிரண்டுக்கு மட்டும் பொத்தாம் பொதுவாக பதில் சொல்லி விட்டு, அண்ணாமலை அடுத்த தலைப்புக்கு நாசூக்காக நகர்ந்திருக்க வேண்டும். அந்தக் கேள்விகள், எடப்பாடியை நோக்கி வீசப்பட வேண்டியவை. அவற்றை அண்ணாமலையிடம் கேட்டதே தவறு. அண்ணாமலை அவற்றை எதிர்கொண்டது அதை விடப் பெரிய தவறு. இங்கேயும் அண்ணாமலை கண்டிப்புக் காட்டத் தவறி விட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. அளவுக்கு மிஞ்சிய பணிவு ஆபத்தானது என்பதை அண்ணாமலை இனியாவது உணருவாரா?

(4) ஆளுநர் குறித்த கேள்விகளுக்கு இத்தனை விரிவான விடை அளித்திருக்கத் தேவை இல்லை. அண்ணாமலை அந்தக் கேள்விகளுக்குக் காட்டமாகப் பதில் சொல்லத் தவறி விட்டார்.

(5) 2024-பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், அப்போது அமைக்கவிருக்கிற கூட்டணி குறித்தும், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் இப்போதே பேசுவது விவேகம் அற்றது. அண்ணாமலை அக்கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக, சாந்தமாக விடையளிப்பதை முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டும். ஓரிரண்டு கேள்விகளுக்குப் பின்னர், மேற்கொண்டு எதுவும் கேட்க விடாமல் அசோகவர்ஷினியைத் தடுத்திருக்க வேண்டும்.

(6) பா.ஜ.கவின் உள்விவகாரங்களை நேர்காணல் செய்பவருடன் இத்தனை விவரமாகப் பேச, அலச வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு எங்கிருந்து வந்தது? தான் 'நல்லவன்', 'மென்மையானவன்' என்பதை எல்லாம் இந்த மாதிரி நபரிடம் அண்ணாமலை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு இல்லை.

(7) மாநில பா.ஜ.கவுக்குள் 'உட்பூசல்' இருப்பதாக அண்ணாமலையே ஒப்புக் கொண்டது போல ஆகி விட்டது. அது சம்பந்தப்பட்ட கேள்வியை, 'Difference of Opinion' என்கிற ஒற்றை வார்த்தையில் சொல்லி, எளிதாகக் கடந்து வந்திருக்க வேண்டும். அண்ணாமலை, அசோகவர்ஷினிக்கு 'answerable' இல்லை. கட்சித் தலைமைக்கு மட்டுமே அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்பதை நினைவு கூரத் தவறி விட்டார்.

ஆனைக்கும் அடி சறுக்கும். சறுக்கி இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...