Monday, February 6, 2023

உண்மை தான்.உரக்க சொல்லுங்கள். பாரதநாடு பழம்பெரும் நாடு .

 சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்

பற்றி சொல்ல மாட்டார்கள்.👏👏👏
#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி😥.
அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.
எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை👆
கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.
#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.👆
அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு .... கு சமானம்
பத்திரிகை முதல் எல்லாம் அரசு கட்டுப்பாடு
#அமெரிக்கா வில் வரி 30%, 😥😥😥அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும்,
மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது.
அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தம் இல்லாதது.
அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.
#அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள்😳😭
ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், #இந்தியா மட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது #இந்தியா மட்டுமே.👏👏👏👏
இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் கிழிக்க முடிகின்றது, எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது
ஜிஎஸ்டிக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் டிவியில் அதுபற்றி பேசமுடிகின்றது.
இன்னும் என்னென்ன அழிச்சாட்டியம் எல்லாம் செய்ய முடிகின்றது
இதில் இடஒதுக்கீடு வேறு.
சிங்கப்பூர், சீனா, ஜப்பான், அமெரிக்கா எங்காவது இட ஒதுக்கீடு கேள்விபட்டிருக்கின்றோமா? இல்லை
மாறாக உலகெல்லாம் இருந்து அறிவு ஜீவிகளை வாங்கி படிக்க வைத்து வேலை கொடுக்கின்றார்கள்.
சிங்கப்பூர் அரசை முகநூலில் விமர்சித்தவன் கணக்கை முடக்கி அவனையே முடக்க ஒருமுறை தீவிரமாய் அலைந்தது சிங்கப்பூர்
இந்தியாவின் முகநூலும் டிவிட்டரும் எப்படியெல்லாம் அரசை கிழிக்கின்றன என்பது சொல்லியா தெரியவேண்டும்? அவ்வளவு #சுதந்திரம் நமக்கு இருக்கின்றது.
ஒன்று இந்த சுதந்திரத்தினை அனுபவியுங்கள்
அல்லது சிங்கப்பூர் போல, சீனா போல கட்டுபாட்டுக்குள் அடிமைபட்டு வாழ வாருங்கள். அப்பொழுது வசதிகள் பெருகலாம் ஆனால் பேச முடியாது
இரண்டும் பெறுவது என்பது சாத்தியமே இல்லை. அதுவும் இந்தியாவில் அறவே இல்லை..
வாக்களிப்பது இந்திய பாணியில் ஆனால் ஆட்சியினை எதிர்பார்ப்பது அமெரிக்க பாணியில் என்றால் அதன் பெயர் கனவு, பகல் கனவு.
தேர்தலே வேண்டாம் சீனா 😥😥😥போல வாழ தயார் என சொல்ல எவனுக்கு இந்நாட்டில் தைரியம் இருக்கின்றது, ஆனால் சீனாவின் வளர்ச்சியினை பார் என்றுமட்டும் வெட்கமே இல்லாமல் சொல்வார்கள்
ஒவ்வொரு நாடும் அதன் மக்களை எப்படி எல்லாம் கண்காணித்து அடக்கி ஒடுக்கி மூச்சுவிட மட்டும் அனுமதிக்கின்றன என பாருங்கள், அப்பொழுது இந்நாட்டின் அருமை தெரியும்.
சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...