Wednesday, February 1, 2023

மோசமாக நடத்தி விடாதீர்கள்.

 ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும்

மோசமாக நடத்தி விடாதீர்கள்.
ஏனெனில் அழகியகண்ணாடி உடைந்துதான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது.உன்னை தாண்டி உன் மனதை காயப்படுத்த
ஒருவனுக்கு துணிச்சல் இருக்கும் போது.
அதையும் தண்டி உன் மனதை சந்தோஷப்படுத்தஉன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.
பின்னால் பேசுபவன்,
புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன நீ சென்று கொண்டே இரு முன்னால்
நண்பர்கள் கூட எதிரிகள் ஆவார்.நிலை தாழ்ந்தால்.
எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார்.நிலை உயர்ந்தால்.காசு உள்ளவன் சொல்லும் அறிவுரை,காசு உள்ளவனுக்கு தான் உதவும்.
காசு இல்லாதவன் சொல்லும் அனுபவமே
காசு இல்லாதவனுக்கு உதவும்.
சிரித்தது மறந்து விடும்.
ஆனால் அழுதது மறக்காது நாம் அதை துடைக்கும் கரமாக இருப்போம்.
காரணமாக இருந்து விடக்கூடாது வாழ்க்கையின்ஒவ்வொரு நிராகரிப்பும்,
அவர்கள் மனதில் நாம் யார்என்பதை உணர்த்தும் அருமருந்து
யாரிடமும் ஏமாந்திட கூடாதுஎன்று எண்ணும் மனதுயாரையும் ஏமாற்றிட கூடாதுஎன்று எண்ணுவதில்லை.எதுவுமே சரியில்லை என்றாலும்,
எல்லாம் சரியாகிவிடும் என்று,நினைப்பது தான்வாழ்க்கை.
நடப்பது எல்லாம் நமக்குஎதிராகவே இருந்தாலும்நாம் நேராகவே நடப்பதில்தான் உள்ளது, நம் மீதுநாம் கொண்ட நம்பிக்கை.
வாழ்க்கையில் விதி சத்தமில்லாமல்
விளையாடிவிட்டுபோய்விடுகிறது.நாம் தான் சத்தமிட்டு அழுகிறோம்.
விதி வலியது. மதி அதைவிட வலியது.
எல்லோருக்கும் கொடுக்கவும் முடியாது.எல்லோரிடமும் எதிர்பார்க்கவும் முடியாது "மரியாதை"அர்த்தமில்லா ஆசைகளும், தேடலில்லா தேவைகளும்,
குறிக்கோளில்லாவாழ்க்கையும்,
ஒருவரை ஏழையாக்கும்.
கடந்து வந்த படிகளை உடைக்காதீர்கள்.ஒருவேளை இறங்குவதற்கு
அதே படிகள் தேவைப்படலாம்.
விதி வலியது.! காலம் கொடியதுநண்பாவாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நிமிர்ந்து நில்!குனிந்து கொடுக்க தொடங்கி விட்டால்!நிமிர விடாது இந்த சமூகம்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...