Wednesday, February 1, 2023

எத்தனையோ கோடிகள் வீண் விரயமாக்கப்படுகிறது.

 சீனியர் சிட்டிசன் களுக்கு ரயில் பயணத்தில் பறிக் கப்பட்ட சலுகையை மீண்டும் கொடுத்திருக்கலாம். கொஞ்சம் புண்ணியமாவது சேர்ந்திருக்கும் நமது நிதி அமைச்சரு க்கு. இதற்கு ஒருவருட செலவு வெறும் 44 கோடிதானாம். சுதந்திரம் பெற்ற பிறகு மூத்த குடிமக்கள் எத்தனை பேர் அலுவலகங்களில் சாதனை புரிந்து முன்னேற்றத்திற்கு துணை இருந்திருப்பார்கள் அல்லவா. அவர்களுக்கு ஒரு நன்றி கூறும் விதமாக இந்த அரசாங்கம் கொடுத்த சலுகையை வாபஸ் வாங்கி இருக்கிறது இது அவர்களுக்கே நியாயமாகப்படுகிறதா. செலவுக்காக பார்த்துக் கொண்டு இந்த கால தலைமுறைகள் மூத்த குடிமக்களை வீட்டில் விட்டுவிட்டு செல்லாமல் இருப்பதற்கு ரயிலில் இவர்கள் கொடுக்கும் சலுகையும் ஒரு காரணம். இதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் மூத்த குடிமக்களுக்கு கொடுக்கும் மரியாதையை நமக்கு கொடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. நிச்சயமாக இது வேதனைக்குரிய விஷயம் தான். எத்தனையோ கோடிகள் வீண் விரயமாக்கப்படுகிறது. மூத்த குடிமக்களின் ஓட்டு இவர்களுக்கு தேவை இல்லையா. இந்த பட்ஜெட்டில் இவர்கள் சரி செய்ய முடியவில்லை என்றால் இனி எப்போது செய்யப் போகிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...