சட்டப்படி வாய்ப்பில்லை என்பதை அறிந்தும் திடீரென்று அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிடுவதும்.. பிறகு அவசரமாக அதை நிறுத்திவைத்து உத்தரவிடுவதும்..
ஒரு ஆளுனருக்கு அழகல்ல!
ஒரு நாள் (சரியாகப் பார்த்தால் ஓரிரவு ) தலைப்புச் செய்திக்காகவா இந்த மோசமான முன்னுதாரண நடவடிக்கை?
நேற்று இரவு அவசர அவசரமாக தொலைக்காட்சி விவாதங்கள், சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் என்று எத்தனைப் பேரின் நேரம் வீணாகியிருக்கிறது - பார்வையாளர்களின் நேரம் உள்பட.
ஆனால் சட்டம் சொல்வது என்னவென்றால் ஒரு அமைச்சரவையை பரிந்துரை செய்வதற்கு மட்டுமே முதல்வருக்கு உரிமை உள்ளது ஒரு அமைச்சர் பதவியில் நீடிப்பது ஆளுநரின் விருப்பத்தை பொறுத்து அமையும்.
நான் சட்டம் படித்தவன் அல்ல. ஆனால் அமைச்சர்கள் நியமனம் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதறிவது எல்லோராலும் முடியும்.
Article 164(1) of the Constitution deals with the appointment of the Chief Minister and other ministers. It states that the Chief Minister is appointed by the Governor, and the other ministers are appointed by the Governor on the advice of the Chief Minister. Additionally, ministers hold office at the pleasure of the Governor.
இதில் pleasure என்கிற வார்த்தையே சட்டபூர்வமாக பயன்பாட்டில் இருக்கும் வார்த்தையா என்பதை சட்ட நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படி ஆளுனருக்கு pleasure இல்லையென்றால் அவர் என்ன செய்யலாம் என்று அடுத்த வரியில் எதுவும் இல்லை. ஆகவே.. இந்த சட்ட வரிகளே இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஆளுனரின் உத்தரவு சட்டப்படி சரி என்றால் அதை அவசரமாக நிறுத்தி வைக்கும் உத்தரவு அவர் பதவிக்கான கண்ணியம் சேர்க்கிறதா?.
No comments:
Post a Comment