இன்று ஆளுநர் தமிழகத்தின் ஊழல் மன்னன் நம்பர் இரண்டான செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை திரும்பப் பெற்றதற்காக சட்டங்களை பேசும் அரசியல் சட்ட சாசனமும் உடனடியாக திருத்தம் செய்யப்பட வேண்டும் ..
குற்றவாளியாக செந்தில் பாலாஜியை முன்னிறுத்தியது இதே திமுக தலைவர் ஸ்டாலின் தான் ..
இங்கே தான் தர்மம் அதர்மத்தை தட்டி தூக்கி எறிந்து விட்டது ..
இன்று தனது குடும்ப ரகசிய ஊழல் வெளி வந்து விடக்கூடாது என்பதற்காக ஐந்து கட்சி அம்மாவாசையான செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக தலைவரும் அவர் வாரிசும் மருமகன் சபரீசன் மற்றும் அறிவாலய அடிமைகள் அனைவரும் காவேரிக்கு படையெடுத்து. ...
தங்களின் அக்கறையை காட்டுவது எதற்காக ???
நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப விசாரணைக்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகளை மிரட்டி கார் கண்ணாடிகளை உடைத்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் செய்த செயல்களுக்கு திமுக ஆளுங்கட்சி என்ன நியாயத்தை சொல்லும் ..என்பது ஊர் அறிந்த ரகசியம் ..
நான் அண்ணாமலையிடம் ஒரு வாட்ச் பில் தான் கேட்டேன் ..
மடியில் கனமில்லைனா அதை கொடுத்துட்டு போக வேண்டியது தானே என்று பெரிய யோக்யசிகாமணி மாதரி செந்தில் பாலாஜி கெத்தாக அறிக்கை விட்டார் அமைச்சர் என்ற ஆணவத்தோடு ...
இன்று
அமலாக்கத் துறை
அவரை தேடி வந்ததும்
நெஞ்சு வலி வந்து விட்டது ..
என்னை துன்புறுத்தினார்கள் அதிகாரிகள் ...
என்று ஆகாசப் புளுகு புளுகும் செந்தில் பாலாஜிக்கு மடியில் கனமிருந்ததால் தான் அதிர்ச்சியில் இத்தனை நாள் வலிக்காத நெஞ்சு வலித்ததா ???
கெத்தாக அமைச்சர் என்ற அதிகாரத் திமிரோடு அதுவும் முதல்வர் கைப்பிள்ளை செல்லப்பிள்ளை என்ற மமதையின் வில் பவரோடு வளைய வந்த செந்தில் பாலாஜிக்கு மடியில் கனமில்லை என்றால் வழக்கை சந்திக்க தயார் என்று துணிவாக நிற்க வேண்டியது தானே ...
தமிழகத்தையே சுருட்டிய கொள்ளைக்கார கூட்டம் அமலாக்கத் துறை ஆப்பு வைத்து விடும் சிக்கினால் என்பதற்காக எத்தனை நாடகங்கள் ஆடுகிறார்கள் ..
இதில் அண்ணாமலையை பற்றி வெட்கமின்றி அறிக்கை விடுகிறார்கள் அசிங்கம் பிடித்தவர்கள் ..
ஒரு குற்றவாளியாக கைதி எண் கொடுத்து அமலாக்கத்துறை மூலம் விசாரணைக்குட்பட்ட அமைச்சரை ஒரு நேர்மையான முதல்வர் வழக்கை சந்தித்து நிரபராதி என நிருபித்த பிறகு அமைச்சர் பதவியை ஏற்று கொள்ளுங்கள் .
இப்போது ராஜினாமா செய்து விடுங்கள் என்றல்லவா சொல்ல வேண்டும் .
இதில் என்ன வேடிக்கை என்றால் திமுக தலைவரால் தான் செந்தில் பாலாஜி ஊழல் செய்கிறார் என்று அந்த வழக்கு போடப்பட்டது ..
இன்று பாஜக வின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று கதை அளக்கிறார் திராவிட மாடலரசு தலைவர் ..
வெட்கக்கேடு இது ...
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தானாம்.
இவர்கள் அதிகாரத் திமிரில்
ஆளுங்கட்சி என்ற ஆணவத்தில் சட்ட ஓட்டைகளை வைத்து அரசியல் சாசன வழி முறைகளை காரணங்காட்டி தப்பிக்க முயற்சிக்கலாம் ..
ஆனால் இனி அது நடக்காது ...
அப்பா சர்க்காரியா ஊழல் கமிசனுக்கு தப்பியதால்
வந்த விளைவு இன்று தமிழகம் நாசமானது .
அதற்கு காரணம் இந்திரா அம்மையாரின் முட்டாள்த்தனம் .
தேர்தல் கூட்டணிக்காக சர்க்காரியா ஊழல் கமிசனை குழி தோண்டி புதைத்தார் .
இன்று இந்திரா...வின் வழித் தோன்றலாக மருமகள் சோனியாவோடு பேரன் ராகுலுடன் கை கோர்த்து முத்துவேல் கருணாநிதி வாரிசு
இன்று வேடிக்கை காட்டுகிறது ..
ஆனால் அன்று தன் சுயநலத்திற்காக இந்திரா அரசியலை கையாண்டார் ..
அதனால் திமுகவிற்கு அதிஷ்டம் இருந்தது .
சோனியா காங்கிரஸ் குடும்பம் அதன் அமைச்சரவை ஆடிய ஊழல் ஆட்டங்களூக்கு சரிசமமாக ஈடு கொடுத்து கபடி விளையாடியது ....கருணாநிதி குடும்பம் .
ஆனால் இன்று மக்கள் நலத்திற்காக
தேசத்தின் நன்மைக்காக
இந்தியாவை வழி நடத்தும் மோதி அரசு அரசியல் கூட்டணிக்காக அரசியல் ஊழல்களை கண்டும் காணாமல் போகாது .
அதற்கு மோதிஜி துணை போக மாட்டார் ..
ஊழலற்ற அவரின் 9 வருட ஆட்சியே அதற்கு சாட்சி .
கறுப்பு பணத்தை ஒழித்தாரா என்று கேட்கும் அறிவற்ற முண்டங்களுக்கு இந்தியாவின் ஊழல் திமிங்கலங்கள் ஓடி ஓடி ஒழிந்து ஜாமீன் கேட்டு கதறுவதிலிருந்து புரியவில்லையா ????
பதுக்கிய கறுப்பு பணமெல்லாம்
செல்லாக்காசாகி போனது .
தர்மம் நின்று கொல்லும் ...
அதற்கு ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்று சாயம் பூசி கபட நாடகம் ஆடலாம் ..
காங்கிரஸ் திமுக கூட்டணிகள் இந்தியாவின் விஷங்கள் ..
அதை தர்மமும் சட்டமும் இணைந்து வீழ்த்த வேண்டும்.
அதை மோதி ஜி அரசு தான் சாதிக்கும் ...
No comments:
Post a Comment