தமிழகத்தில் எந்த பஸ்நிலையம் போனாலும் சரி...
பஸ்நிலையம் சுற்றிலும் பிரியாணி கடைகளும், அசைவ உணவகங்களும் தான் தென்படுகின்றன.
சைவம் மட்டுமே பரிமாறும் உணவகங்கள் கிட்டத்தட்ட காலாவதி ஆகிவிட்டன.
இது கிட்டத்தட்ட தமிழக பக்தர்கள் மீது திணிக்கப்பட்ட துல்லியமான தாக்குதல் . அவர்கள் விரும்பும் உணவை அவர்கள் உண்ண வழியில்லாத அளவுக்கு அவர்கள் மீது பிரியாணியும், மாமிசமும் திணிக்கப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக கோவிலில் தரிசனம் முடித்தால் போதும், வெளியே வந்து அசைவம் உண்ணலாம் என்பது மெல்ல மெல்ல அவர்கள் புத்தியில் திணிக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் இது தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட கலாச்சார தாக்குதல். மிக வலுவாக, மிக எளிதாக இந்த தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கோவில்களில் இலவச உணவு வழங்கும் பெரும்பாலான அன்ன சத்திரங்கள், மடங்கள் மூடப்பட்டு விட்டன.
முன்னாள் முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட கோவில் வருமானத்தில், பக்தர்கள் இடம் இருந்து பெறப்பட்ட அன்னதான நன்கொடை மூலம் நடத்தப்பெறும் அன்னதான திட்டம் முழுவதும் ஊழல் புரையோடியது போல் தோன்றுகிறது. நூறு டோக்கன்கள் அல்லது குறிப்பிட்ட டோக்கன்கள் என்று சிலருக்கு மட்டும் வெற்றுக் கடமை போல சுமாரான உணவு வழங்கப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பணப்பையை குறிவைத்து பிரசாதம் என்ற பெயரில் லட்டு, வடை, முறுக்கு, அதிரசம், புளியோதரை, பொங்கல் விநியோகம் கழக கண்மணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது.
ஒருபுறம் கோவிலுக்கு உள்ளே கொள்ளை, அன்ன சத்திரங்கள் ஒழிப்பு, வெளியே சுற்றிலும் பிரியாணி கடைகளும் அசைவ கடைகளும் என்று தமிழக பக்தர்கள் சூறையாடப்படுகிறார்கள்.
இது நல்லதல்ல. இந்த நிலை மாற வேண்டும்.
தமிழக பக்தர்கள் தங்கள் மீது தொடுக்கப்பட்ட இந்த கலாச்சார தாக்குதல்களை புரிந்து கொண்டு மீளவேண்டும்.
No comments:
Post a Comment