Saturday, July 15, 2023

அரசும் அறியவில்லை.

 மளிகை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது ஏன் என்று தெரியவில்லை. இதன்காரணமாக .நடுத்தர வர்க்கம் படும் இன்னல்கள் ஏராளம். ஆனால் ஆளும் அரசுகள் எதையும் கண்டுகொள்ளாமல் நழுவி வருவது வேதனையை. மத்திய அரசு இரண்டாம் முறையாக ஆட்சி கைபற்றியில் இருந்து சராசரி மக்களின் சுமைகளை பல மடங்கு ஏற்றி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள தான் வேண்டும். எரிபொருள் விலை ஒரு நிலையில் கடந்த 1 வருடமாக உள்ளது என்று சொன்னாலும் இந்த விலை அதுவும் பெட்ரோல் விலை அதிகம். ஒரு குடும்பத்தில் இரண்டு இரு சக்கர வாகனம் தேவையாக உள்ளது .சாமானிய மக்கள் எப்படி சமாளிக்க முடியும். மத்திய அரசு சொல்கிறது பெட்ரோல் GST கீழ் கொண்டு வந்தால் குறையும் எனவும் மாநில அரசுகள் சம்மதிக்க வில்லை என்று கூறி தான் ஒதுங்கி கொள்கிறது.மாநில அரசின் வரி விதிப்பு பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக அளவில் உள்ளது என்பதும் உண்மை. மொத்தத்தில் பாதிப்பு நமக்கு தான்.

மளிகை பொருட்கள் பருப்பு வகைகள் மிளகாய் புளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அரிசி தங்கம் போல் தினம் ஒரு விலை. பருப்பு வகைகள் உற்பத்தி சார்ந்தது உற்பத்தி பெருக்கம் இருந்தால் விலை குறைவாக கிடைக்கும். ஆனால் அரிசி வியாபாரிகள் மத்தியில் லாபி அமைத்து விலையை ஏற்றிய வண்ணம் உள்ளனர். மத்திய அரசு பல விஷயங்களை சீர் செய்து உள்ளது ஆனால் உணவு பொருட்கள் விலை ஏற்றத்தில் கவனத்தை செலுத்த வில்லை. இதை நிலை நீடித்தால் கடுமையான போராட்டம் கிளர்ச்சியை நாடு சந்திக்க நேரிடும். சமையல் எண்ணெய் விலை ஏறிய வண்ணமே உள்ளது. இன்றைய தினத்தில் ஊழியர்கள் சம்பளம் ஏறி உள்ளது என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை. அரசு மற்றும் காப்ரேட் நிறுவனங்கள் கொடுக்கும் மாத சம்பளம் சிறு நிறுவனங்கள் கொடுக்க முடியுமா? தொற்று 19 பிறகு பல சிறு குறு நிறுவனங்கள் இயங்கவில்லை என்பதை நாம் அரசும் அறியவில்லை.
வந்தே பாரத் போன்ற ரயில்கள் மற்றும் நவீன வடிவமைப்பு கொண்ட விமான நிலையங்கள் என்று இந்தியா உலக அளவில் கொண்டு செல்லும் இந்த அரசு விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டியது கட்டாயம். மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டு கொண்டு சிலைகளை அமைப்பது கடலில் பேனா வைப்பதில் முனைப்பு காட்டும் வேகத்தை
உணவு பொருட்கள் விநியோக சேவை மற்றும் விலைவாசி குறைக்க அல்லது நிலையாக வைக்க இனி உயர கூடாது என்று எண்ணத்தில் செயல்பட்டால் தான் ஒரு சராசரி இந்தியன் வாழ்வு முறையாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...