Friday, May 5, 2017

*இது ‘பீஷ்மர்’ சொன்னது:*

*ஒருவன் தூய்மையான மனமில்லாமல் மற்றவர்களுக்கு அன்னமிட்டால்....................*
*அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்*
*இது ‘பீஷ்மர்’ சொன்னது:*
********************************************************
*“நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!”.*
*பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத்திருந்தார்.*
*அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார்.*
*தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலி யுடன் பிதாமகரிடம் சென்றார்.*
*பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள்.*
*அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், “நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? ” என்று கடுமையாகக்கேட்டார்.*
பா சூரியா வழங்கும்
*“துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்த போது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்?*
*தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ?*
*இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது ? ” என்று சொல்ல,*
*பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.*
*அப்பொழுது பீஷ்மர்பேசினார்.*
*“பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண் டும். அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.*
*துரியோதனன், அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான்.*
*ஆனால், அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல.*
*சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான்.*
*உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம்.*
*”ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.*
*நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீயகுணமே குடி கொண்டு விட்டது.*
*அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .”*
*” ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது.*
*அத்தோடு தீயசக்தி களும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.*
*எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத்தகுதியுள்ளவன் . கேளுங்கள் ” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.*
*அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.*
*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...