Tuesday, May 2, 2017

வேதனைக்குரிய செய்தி.

கடந்த 4 ஆண்டுகளில் அமைதி உடன்படிக்கையை மீறி நமது எல்லையில் ஊடுறுவிய தீவிரவாதிகளும், நமது இராணுவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும்!
2014இல் 153 முறை அமைதி உடன்படிக்கையை மீறி ஊடுறுவியவர்களில் 104 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 31 பேர் வீரமறணம் அடைந்துள்ளனர். 2015இல் 150 முறையும் இதில் 101 பேர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நம்முடைய 33 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 2016இல் 223 முறை அத்துமீறி அதிகபட்சமாக இந்தியாவிற்குள் நுழைந்து 150 தீவிரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். அதில் நமது இராணுவ வீரர்களில் 63 பேர் வீரமரணம் அடைந்தனர். 2017இல் இந்த 4 மாதங்களில் மட்டும் 65 முறை நமது எல்லையைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். இதில் 42 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் நமது இராணுவ வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டில் முதன்முறையாக நமது இரண்டு இராணுவ வீரர்களைக்கொன்று அவர்தம் இன்னுடல்களையும் சிதைத்துள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய செய்தி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...