பொதுவாக யாரும் கெட்டுப் போகணும்னு நான் மனசால் கூட நினைப்பதில்லை. ஆனால் லோக க்ஷேமத்துக்காக சன் டிவி அழியணும்னு நினைக்கிறேன்.
காரணம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று நான்கு மாநிலங்கள் மட்டுமின்றி உலகெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழி பேசும் மக்கள் வீட்டின் வரவேற்பறைக்கே சென்று;
காலை முதலே சீரியல்கள், ஒருவனுக்கு பல மனைவிகள், ஒருத்திக்கு பல கணவன்கள் நம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது இந்த சேனல். மாலையில் சரியாக விளக்கேற்றும் நேரத்தில் சாவு, இழவு, பிணம், வசை பாடுதல் போன்ற காட்சிகள் இந்த சேனலில் இடம் பெறும்.
குடிப்பதை, குடிக்கும் காட்சிளை, தரமற்ற குத்தாட்டம், விவாதம் என்ற பெயரில் ஹிந்து விரோதத்தை, துவேஷத்தை வளர்ப்பது; கருணாநிதியின் குடும்பத்தால் திமுகவிற்கு ஆதரவு பிரச்சாரம் செய்வதற்காகவே உருவானது இந்தசேனல்.
புற்றுநோயை விட மோசமாக பரவியிருக்கும் இந்த சேனல் அழிய வேண்டும். இந்த சேனலின் வளர்ச்சியைக் கண்டு அதே வழியில் இப்போது பல குப்பைச் சேனல்கள் வளர்ந்துள்ளன.
தரமுள்ள ஒரு சிலவற்றைத் தவிர மற்ற சேனல்கள் முடக்கப்பட வேண்டும். போதும். ஊடக சுதந்திரத்தால் நாம் அனுபவித்தது போதும்.
No comments:
Post a Comment