Wednesday, March 7, 2018

இந்த காவல் நாயை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

"திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் BHEL ஊரகம் கைலாசபுரம் கணேசா ரவுண்டானா அருகே போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது ...அந்தவழியே ஹெல்மெட் அணியாமல் தர்மராஜ் என்பவர் தனது மனைவி உஷா (34) வுடன் வந்தபோது போக்குவரத்து காவலர்கள் வண்டியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார்..
அப்போது காவலர் காமராஜ் என்பவர் பின்னாலேயே துரத்தி சென்று வண்டியை
எட்டி உதைத்ததில் வாகனம் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில் 3 மாத கர்ப்பிணி பெண் உஷாவும், அவரது கணவரும் கீழே விழுந்து படுகாய மடைந்தனர்.
உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். சிகிச்சை பலனின்றி கர்பிணி பெண்ணான உஷா மரணமடைந்தார்.

குடிபோதையில் இருந்த காவலர் காமராசை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலை யில் கடந்த ஒன்றரை மணி நேரமாக சாலை மறியல் செய்து வருகின்றனர். 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன ங்கள் நிற்கின்றன.
பேச்சு வார்த்தை நடத்த வந்த காவல் துணை ஆணையர் சக்தி கணேஷ் மீது செருப்பு வீசப்பட்டது. காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன...
செய்தியாளர்கள் மீதும் கல்வீசி தாக்கினர்...

வாட்டாட்சியர் திருமதி ஷோபா அவர்களும், காவல் துணை ஆணையர் சக்தி கணேஷ் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
காவலர் காமராஜ் கைது செய்யப்பட்டுவிட்டார்... விரைவில் அவர் பணிநீக்கம் செய்ய ஆவனசெய்கிறோம்..
எனவே சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து செல்லுங்கள் என பல முறை பணிந்து கேட்டுக்கொண்டும் மக்கள் இதுவரையும் கலைந்து செல்லவில்லை...
சாலைமறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...
07 - 03 - 2018 - புதன்கிழமை
இரவு 10.00 மணி நிலவரம்..
சம்பவத்திற்கு காரணமான காவல் துறை ஆய்வாளர் காமராஜ் இவர்தான்..Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...