Saturday, March 30, 2019

கோடைகால சரும நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள 10 டிப்ஸ்.



கோடைவெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்காக நாம் வீட்டிலேயே முடங்கிவிடமுடியாது. அன்றாடம் செய்யும் அலுவல்களைச் செய்துதானே ஆகவேண்டும். வேலையும் செய்ய வேண்டும் வெயிலில் இருந்தும் தப்பிக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்காக சில டிப்ஸ்களை சரும நோய் நிபுணர் சிறப்பு மருத்துவர் மரு.குரு.இளங்கோவனிடம் கேட்டுத் தொகுத்துள்ளோம்.
1. வெயில் காலத்தில் ஏற்படும் மிகச் சாதாரணமான சரும நோய் வியர்க்குரு. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால்,சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை அதிகமாக சுரந்து வெளியேறமுடியாமல் தடைபடும்போது வியர்க்குரு ஏற்படுகிறது.
2. வியர்க்குருவைத் தடுக்க இரண்டுமுறை குளிப்பது நல்லது. கிருமி நாசினி கொண்ட சோப்பைப் பயன்படுத்தலாம்.
3. வியர்க்குருவைக் கட்டுப்படுத்த அதற்காக கடைகளில் விற்கும் பவுடர்களைப் பூசுவதைத் தவிர்ப்பதே நலம். அதற்குப் பதிலாக கேலமின் என்ற லோஷனைத் தேய்த்துக்கொள்ளலாம்.
4. பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. சின்தடிக் ரக உடைகளைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளையும் தவிர்த்தல் வேண்டும்.
5. தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குருகூட தொற்றாக மாறக்கூடும் என்பதால் அத்தகையோர் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம்.
6. சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேறாவிட்டால் வேனல்கட்டிகள் ஏற்படும். வேனல்கட்டிகள் ஏற்பட்டால் எரித்ரோமைசின் போன்ற ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி உட்கொள்ளவும்.
7. உணவைப் பொருத்தவரை அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மோர், பழவகைகள் சாப்பிடுதல் நல்லது. எண்ணெயில் வறுத்த பொருட்களைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம். அதிகமான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.
8. சிலருக்கு வியர்வை காரணமாக இடுப்பு, தொடைப் பகுதிகளில் ரிங் வார்ம் எனப்படும் படை நோய் ஏற்படலாம். சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கும்போது படர்தாமரை ஏற்படும். அவர்கள் நிச்சயமாக மருத்துவரை அணுகியே அவர்களுடைய தோலின் தன்மைக்கு ஏற்ப மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
9. சிலருக்கு வெயிலில் சென்றாலே முகம் கருத்துவிடும். அத்தகையோர் சன் ஸ்க்ரீன் லோஷன்களைப் பூசிக் கொண்டு வெளியே செல்வது நலம்.
10. ஏ.சி. பயன்படுத்துவோர் சீரான குளிர்நிலையை செட் செய்து பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...