ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்
ஏன்? கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுகிறோம் – தெரிந்து கொள்ளுங்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர், என்னிடம் கேட்ட
கேள்வி இது.
இக்காலத்தில் தடுக்கி விழுந்தால் துரித உணவகமும், எட்டிப் பார்த்தால் உணவக மும் இருப்பதுபோல், அக்காலத்தில் எல்லாம் கிடையாது. பெரிய கோவில்களில், அங்குவரும் பக்தர்களின் பசியாற்றுவதற்கு அன்னதானம் வழங்குவார்கள். ஆனால் அன்னதானம் வழங்கப்படாத சிறுசிறு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பசி எடுத்தால், ஒண்ணு வீட்டிற்கு திரும்பி சென்று சாப்பிட வேண்டும் அல்லது, பிரதான சாலைகளுக்கு வந்து அங்கு தேடி அலைந்து, உணவு நன்றாக இருக்கிறதோ இல்லையோ சாப்பாடு கிடைத்தால் போதும் என்று சாப்பிட வேண்டும்.
அதனால்தான், நமது பெரியவர்கள், சிறு கோயில்களுக்கு செல்லும்போது, அந்த வீட்டு பெண்கள் வெண்பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்களையு ம் கையோடு கொண்டு செல்வார்கள். கோயிலுக்கு சென்றபிறகு அங்கு கிடைக்கும் செங்கற்களை கொண்டு அடுப்பு போன்ற வடிவத்தில், அடுக்கி, வறட்டிகளை அல்லது சுள்ளிகளை எடுத்து செங்கல் அடுப்பிற்குள் வைத்து, மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி, தீக்குச்சி கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். அதன்பிறகு அதன்மீது பானையை வைத்து, தண்ணீர் ஊற்றி, வெண்பொங்கல் சமைப்பார்கள்.
நீண்டதூரம் பயணித்து சிறு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பசியெடுக்கும். வயிற்றில் பசி இருக்கும்போது, மன அமைதியுடன் கடவுளை வழிபடுவது என்பது சற்றே கடினமான ஒன்று. அந்த பசியாற சுடச்சுட பொங்கல் தயார். அந்த வெண் பொங்கலை அவர்களும் வயிறாற சாப்பிட்டு, அங்கு வரும் பிற பக்தர்களுக்கும் அன்போடு கொடுத்து அவர்களின் பசியையும் ஆற்றிய, அதன்பிறகு கோயிலுக்குள் சென்று கடவுளை மன அமைதியுடன் வழிபாடுவார்கள்.
ஆக கோயில்களில் வெண்பொங்கல் வைப்பது இதற்காகத்தான். நமது முன்னோர்க ள் எதையும் ஏன் எதற்காக செய்கிறோம் என்ற காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டார்கள். நாமும் அதனை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு அதனை பின்பற் றி வருகிறோம். இதோ பாருங்கள் மேற்கூறிய காரணங்களால்தான் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் வந்தது. ஆனால், தடுக்கி விழுந்தால் துரித உணவகம், எட்டிப் பார்த்தால் உணவகம் என்று பெருகிவிட்ட இன்றைய காலக் கட்டத்தில்கூட கோயில்களில் வெண்பொங்கல் வைக்கும் பழக்கத்தை நாம் பின்பற்றி வருகிறோம்.
இங்கு நீங்கள் ஒன்று கேட்கலாம், ஏன் வெண்பொங்கல் மட்டும் சமைக்கிறார்கள். வெவ்வேறு வகையான உணவுகளை சமைக்கலாமே. என்று…
சமைக்கும் உணவுகளில் வெண்பொங்கல் வைப்பது மிக எளிமையானது விரைவா க சமைக்கக் கூடியது, மேலும் பொங்கல் சமைக்க, குறைவான பொருட்களே தேவைப்படும். ஆகவே தான் கோயில்களில் பொங்கல் வைக்கிறார்கள்.
No comments:
Post a Comment