Sunday, March 24, 2019

துளிர் விட துவங்குது ஆதிக்கம் கமல் கட்சியில் திடீர் புகைச்சல்.


துளிர் விட துவங்குது ஆதிக்கம்  கமல் கட்சியில் திடீர் புகைச்சல்
முதல் கட்ட வேட்பாளர் அறிவிப்பில், வட சென்னை தொகுதி வேட்பாளர் மவுரியாவின் ஆதிக்கம் இருப்பதாக, கமல் கட்சி நிர்வாகிகளிடையே, புகைச்சல் கிளம்பியுள்ளதுநடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில், 21 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.இறுதி கட்ட பட்டியலை, வரும், 24ம் தேதி, கோவையில் வெளியிட உள்ளார். அப்போது, கமல் வேட்பாளராக, களம் இறங்குவாரா, இல்லையா என்பது தெரிய வரும்.இந்நிலையில், வேட்பாளர் தேர்வில், குடும்ப அரசியலும், அதிகார வர்க்கமும் இணைந்து, உண்மையான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஓரம்கட்டி விட்டதாக, புகார் எழுந்துள்ளதுவட சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா, வேட்பாளர் தேர்வு குழுவிலும் இடம் பெற்றுஇருந்தார்.இவரது உறவினரான, செ.கு.தமிழரசனின், இந்திய குடியரசு கட்சியை, கூட்டணிக்குள் சேர்த்து, அவர்களுக்கு, ஒரு லோக்சபா, மூன்று சட்டசபை தொகுதிகள் ஒதுக்கியதில், கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதேபோல, திருவள்ளுவர் தனி தொகுதி வேட்பாளரான லோகரங்கன் மற்றும் விழுப்புரம் தனி தொகுதி வேட்பாளர் அன்பில் பொய்யாமொழியும், மவுரியாவின் உறவினர்கள் என்ற தகவல், கட்சி வட்டாரத்தில், அதிருப்தி அலையை அதிகப்படுத்தி உள்ளது.அனைத்துக்கும் மேலாக, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன், வடசென்னை தொகுதிக்கு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரங்கராஜன் பெயர் தான் பரிசீலனையில் இருந்தது.கடைசி நேரத்தில், வேட்பாளர் மாறியதும், கட்சிக்குள் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது.குடும்ப அரசியலை, ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து நிற்கும் கமல், தன் கட்சியில் முளைக்கும் குடும்ப ஆதிக்கத்தை, 
ஆரம்பத்திலேயே களையெடுக்க வேண்டும் என, அக்கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...