கருணாநிதி உயிரோடு இருந்தபோதே எனக்கு அவரை பிடிக்காது. காரணம் அவரின் நேர்மையின்மை. சுயநலம். அவர் இறந்த பிறகும் அவர் மேல் கிஞ்சித்தும் மனிதாபிமான அடிப்படையில் இரக்கமோ கருணையோ எழ மறுக்கிறது. காரணம். அவரின் செயல்கள் ஒரு நூற்றாண்டாவது தமிழகத்தை பாதிக்கும் . அத்தனை கொடுமை அவரால் தமிழகத்திற்கு நடந்திருக்கிறது. எல்லா தில்லுமுல்லு களையும் வெட்கமின்றி செய்திருக்கிறார்.எல்லா அக்கிரமங்களையும் எந்தவித கூச்சமுமின்றி செய்திருக்கிறார். எல்லா துரோகங்களையும் ஈவு இரக்கமின்றி செய்திருக்கிறார். அந்த உயரத்தில் இருந்ததால் அவருக்கு எந்த எதிர்ப்பும் பெரிதாக எழவில்லை. மாறாக ஜால்ரா தான் ஜாஸ்தி. அது கொடுத்த துணிச்சலில் அட்டூழியங்களை அச்சமின்றி செய்தார். தூய்மையானவர்கள் நேர்மையானவர்கள் அவரை தூஷித்துக் கொண்டே இருப்பார்கள். ஊழலின் ஊற்றுக்கண். துரோகத்தின் மொத்த உருவம். நேர்மையின்மையின் பிறப்பிடம். அரசியல் அட்டூழியங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரர். இவர் மேல் கோபம் கோபமாக வருகிறதா? இவரை தண்டிக்க வேண்டுமா? திமுகவுக்கு முழுக்கு போடுங்கள். திமுகவை அழித்தொழியுங்கள். தமிழ்நாட்டில் திமுக இருந்த இடமே தெரியாமல் அதன் தடமே தெரியாமல் அதை சிதைக்க வேண்டும்.அவனை ஆதரித்த கூட்டமே ஓரு திருட்டு கூட்டம்.அவனால் இந்த கூட்டம் ஏதோ ஒரு பலனை அடைந்தது. அதன் காரணமாகவே அவன் வளர்ந்து ஓட்டு மொத்த சமூகத்திற்கும் கேடு விளைந்தது. நாட்டில் நடக்கிற அனைத்து அநியாயங்களுக்கும் காரணம் அரசியல்வாதிகள் தான்! எந்த அரசு அலுவலகங்கள் சென்றாலும் லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்காது! அதன் ஆணிவேரை தேடி போனால் கடைசியில் அது அரசியல்வாதியிடம் போய் முடியும்! ஊழல் அராஜகம் அத்துமீறல் ரவுடியிஸம் இவற்றிற்கெல்லாம் மூல காரணமான அரசியல்வாதிகளை பற்றி புத்தகம் போட்டால் எந்த அரசியல்வாதிகளும் தப்ப மாட்டார்கள்! ஆனால் அந்த புத்தகத்தின் அட்டைபடத்தில் இடம்பெறும் தகுதி கருணாநிதியை தவிர வேறு எந்த அரசியல்வாதிக்கும் தர முடியாது!
இந்தியாவில் ஊழலை கற்றுக்கொடுத்த ..தன்னிகறற்றவன்.
இந்தியாவில் ஊழலை கற்றுக்கொடுத்த ..தன்னிகறற்றவன்.
No comments:
Post a Comment