Sunday, March 24, 2019

உட்கட்சிப் பூசல், கோஷ்டி மோதல் – தி.மு.க நாசுக்காக கூட்டணி கட்சிக்கு தட்டி விட்ட தொகுதி..? கழகத்தை கலங்கடிக்கும் களநிலவரம்..!


ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 6 முறையும், தமாகா ஒரு முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், 1967-ல் சுயேச் சையும், 1971-ல் பார்வர்ட் பிளாக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.
1999, 2004, 2009, 2014 ஆகிய 4 நான்கு தேர்தல்களில் அதிமுக, திமுக நேரடியாக மோதின. ஆனால் 2019-ல் அதிமுக, கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கும், திமுக, கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கும் ஒதுக்கியுள்ளன. திமுக இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதன் காரணம் அக்கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களும், கோஷ்டி பூசல்களுமே. கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் அத்தொகுதி திமுக தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர். திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டு அவர் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். பரமக்குடி சட்டப் பேரவை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சம்பத்குமாரும் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட் டார். இருந்தபோதும் திமுக தொண் டர்கள் மத்தியில் பெரிய ஆரவாரம் இல்லை.


இம்முறை திருநெல்வேலி தொகுதியில் அதிமுக., போட்டியிடுவதால், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எப்போதும் இஸ்லாமியர்களே போட்டியிடுவதால், இம்முறை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இவர் 2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...