கொடநாடு..,
பாண்டே இன்று காலை சரியாக 11.30 மணிக்கு கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரிடையே நடந்த உரையாடலை பதிவு செய்திருந்த ரகசிய வீடியோவினை வெளியிட்டிருந்தார்.
தற்போது தமிழகம் முழுவதும் அந்த வீடியோ கடும் வைரல் ஆகியுள்ளது, சமூகவலைதளத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் பெரும்பாலோனோர் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது அந்த வீடியோ குறித்த விளக்கத்தினை பாண்டே தனது சாணக்யா சேனலின் மூலம் வெளியிட்டிருந்தார், அதில் வீடியோ எப்படி கிடைத்தது முதல் தனது கேள்விகளையும் பதிவு செய்திருந்தார்.
அதில் தனக்கு இந்த வீடியோ இரண்டு விதமாக கிடைத்ததாகவும் ஒன்று எடிட் செய்யப்பட்டது, மற்றொன்று மலையாளத்தில் நடந்த முழு உரையாடல் வீடியோ அது 19 நிமிடம் உரையாடலாக இருப்பதால் அதனை நாளை வெளியிட இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேலும் குற்றவாளிகள் இருவரிடையே நடந்த உரையாடலில் அவர்கள் யாருடைய தூண்டதிலின் பெயரிலோ இந்த விசயத்தில் எடப்பாடி பழனிசாமியை திட்டமிட்டு இழுத்து விட்டு தெளிவாக தெரிவதாக சொல்லி இருந்தார்.
மேலும் டெல்லியில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர்தான் இதில் திட்டமிட்டு இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒபிஸ் குறித்து திட்டமிட்டபோது அவர் எதிரணியில் இருப்பதாகவும் அவரை இழுத்தால் நாம் மாட்டி கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர், எனவே இந்த விசயத்தில் ஓ. பன்னீர் செல்வத்தையும் இழுத்துவிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் ஊடங்கள் ஏதும் இந்த வீடியோவினை தற்போது வரை ஒப்புக்கு கூட வெளியிடாததற்கான காரணத்தை நீங்களே புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்., ஒருவேளை அனைத்து ஊடக முதலாளிகளும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் வெளியிடாமல் இருப்பார்களோ என்று நினைத்திருக்கலாம்.
பாண்டே வெளியிட்ட விடீயோவின் மூலம் ஒன்று தெளிவாகி இருக்கிறது, கொடநாடு விவகாரத்தை போல நிச்சயம் பொள்ளாச்சி வழக்கிலும் வேண்டுமென்றே அதிமுக பெயரை கெடுப்பதற்காக இவர்களே வீடியோவினை செட் செய்து வெளியிட்டிருக்கலாம்.
குறிப்பாக ஊடகங்களை முழுவதும் தி.மு.க தரப்பினர் கைப்பற்றி தங்களுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிட செய்வதாகவும் குற்ற சாட்டு எழுகிறது.
மேலும் கொடநாடு கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களை, ஜாமினில் எடுத்ததே திமுக பிரமுகர்தான், அன்றே ஸ்டாலின் தனது முதல்வர் ஆசைக்காக எந்த லெவலுக்கு போய், தமிழகத்தின் மானத்தையும் அடமானம் வைப்பார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இன்று அது உண்மையாக இருக்குமோ என்று ஒவ்வொருவரும் தங்கள் கேள்விகளை திமுகவை நோக்கி எழுப்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment