லோக்சபா தேர்தலில், 'சீட்' கிடைக்காத, காங்., கோஷ்டி தலைவர்கள், தங்களின் ஆதரவாளர்களை, தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கியிருக்கும்படி கூறியுள்ளனர்.இந்த தகவல் தெரிய வந்ததும், அதிர்ச்சி அடைந்த, தி.மு.க., மேலிடம், காங்கிரஸ் தலைவர், ராகுலிடம் புகார் தெரிவித்துள்ளது.
தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள, மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒதுக்கவில்லை
தொகுதி பங்கீட்டில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு, சாதகமான தொகுதிகளை, தி.மு.க., ஒதுக்கவில்லை.இதனால், கோஷ்டி தலைவர் கள் சிலர், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், தி.மு.க.,மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.தமிழகத்தில், காங்கிரஸ் போட்டி யிடும், ஒன்பது தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை, நீண்ட இழுபறிக்கு பின், டில்லி மேலிடம், நள்ளிரவில் வெளியிட்டது.
கன்னியாகுமரி, ஆரணி, தேனி, சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட, லோக்சபா தொகுதி களில், 'சீட்' கேட்டு, ஏமாற்றம் அடைந்த, கோஷ்டி தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
தி.மு.க.,தலைவர், ஸ்டாலின், நடிகர், உதயநிதி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., மூத்த தலைவர், பீட்டர்அல்போன்ஸ் போன்றவர்கள் மட்டும், பிரசார பயணத்தை துவக்கி உள்ளனர்.

தேர்தல் பணி
ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள, மற்ற கோஷ்டிதலைவர்கள், 'சீட்' கிடைக்காத கோபத்தில், வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.தங்கள் ஆதரவாளர்களை யும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டாமல், ஒதுங்கி இருக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.இதனால், மாவட்ட அளவில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தி.மு.க., -காங்கிரஸ் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.
திருச்சி, கரூர், தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளில், உள்ளூர் காங்கிரசார், தி.மு.க.,வுக்கு சரிவர ஒத்துழைப்பு தராமல் இருப்பதால், அங்கு, அ.தி.மு.க.,வின் பிரசாரம் முன்னணியில் உள்ள தகவல், தி.மு.க., மேலிடத்திற்கு கிடைத்துள்ளது.இதையடுத்து, முடங்கி கிடக்கும், காங்., கோஷ்டிகள் களமிறங்கவும், அவர்களின் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடவும், காங்., மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ராகுலிடம், தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பது தொடர்பாக, திருச்சி அறிவாலயத்தில், தி.மு.க., மாவட்டச் செயலர், நேரு தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிகள் தவிர, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக,அழகிரி மாற்றப் பட்ட பின், திருச்சி அருணாச்சல மன்றத்தில் இருந்த பேனரில், ஏற்கனவே மாநில தலைவராக இருந்த, திருநாவுக்கரசரின் படம் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அந்த கட்சியில் உள்ள மாற்று கோஷ்டியினரே, திருநாவுக்கரசர் படத்துக்கு தார் ஊற்றியிருந்தனர். இந்நிலையில், முன்னாள், எம்.பி, அடைக்கலராஜ் குடும்பத் தில், லுாயிசை வேட்பாளராக்க, மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக முயற்சி செய்தும், 'சீட்' கிடைக்கவில்லை. திருநாவுக்கர சரை, திருச்சி தொகுதியில் வேட்பாளராக அறிவித்ததால், ஜெரோம் ஆரோக்கிய ராஜ் உட்பட அதிருப்தி கோஷ்டியினர், முழுமை யாக புறக்கணித்தனர். திருநாவுக்கர சரை வரவேற்க கூட செல்லவில்லை.
தி.மு.க., மாவட்டச் செயலர், நேரு மற்றும் கூட்டணி கட்சியினர், அவரை வரவேற்க சென்றிருந்தார். வேட்புமனு தாக்கலின் போதும், நேரு, மகேஷ் பொய்யாமொழி, பெரியண்ணன் அரசு போன்ற, தி.மு.க.,வினரே திருநாவுக்கரசருடன் இருந்தனர்.
அதேபோல், நேற்று அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் வரவில்லை. பெரும்பாலும், தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியினர் மட்டுமே, செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
திருச்சியில் உள்ள ஒரு கோஷ்டியினர், இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய, தேனிக்கு சென்று விட்டதாகவும், மற்றொரு கோஷ்டி, கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய, சிவகங்கைக்கு சென்று விட்ட தாகவும் கூறப்படுகிறது.இதனால், திருநாவுக் கரசர், தி.மு.க., வினரின் பலத்தையே தேர்தல் பிரசாரத்துக்கு நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment