Monday, March 25, 2019

பா.ஜ.,மீது அதிருப்தியில் அத்வானி ?

லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் கட்சி தலைமை மீது மூத்த தலைவர் அத்வானி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

91 வயதாகும் அத்வானி, கடந்த 6 முறையாக காந்திநகர் தொகுதி எம்.பி.,யாக இருந்து வருகிறார். ஆனால் இந்த முறை காந்திநகர் தொகுதிக்கு பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அத்வானி மட்டுமின்றி கட்சியில் 75 வயதிற்கு மேற்பட்ட தலைவர்கள் 10 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களில் சிலர் தாங்களாகவே முன்வந்து தேர்தலில் இனி போட்டியிட போவதில்லை என அறிவித்தனர். மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாயமாகவே ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இது குறித்து அத்வானி; தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது ஒரு விஷயமே இல்லை. ஆனால் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன் எந்த பெரிய தலைவர்களும் தன்னை தொடர்பு கொண்டு பேசவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி அத்வானி வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


மெல்ல மெல்ல ஓரம்

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் துணை பிரதமராக இருந்த அத்வானி, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆலோசனை குழுவிற்கு மாற்றப்பட்டார். பிறகு கட்சி விழாக்களில் அத்வானி மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு முன்தினம் பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் ராம்லால், அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதை கூறி உள்ளார். ஆனால் அத்வானி இதனை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், இந்த முறையும் தேர்தலில் போட்டியிட பிடிவாதமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


அத்வானி தனது முடிவை கூறிய பிறகும், கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் அவரை தொடர்பு கொண்டு ஆலோசிக்காமல், வேட்பாளர்களை அறிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சி தலைமை மீது அத்வானி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கடுமையாக முயற்சித்தும் அத்வானிக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது. அத்வானிக்கு பதிலாக மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே அத்வானி அதிருப்தி அடைந்து, கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...