பெரியகுளம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் (51) கட்சியில் அறிமுகம் இல்லாதவர். பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த இவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சமூகநல அலுவலராக உள்ளார். துணைமுதல்வர் ஓபிஎஸ்.,க்கு நெருக்கம் என்பதால் தொண்டர்களுக்கு அறிமுகம் இல்லாத இவர் வேட்பாளராக ஆனார். 'தேர்தலில் போட்டியிடுவதால் அரசுப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுப்பேன்' என கூறி சீட் வாங்கினார். ஆனால் சீட் அறிவிப்புக்கு பின், வேலையை ராஜினாமா செய்ய தயங்கினார்.
தேனியில் நேற்று முன்தினம் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேனி லோக்சபா தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி வேட்பாளர் லோகிராஜன் பங்கேற்றனர். ஆனால் முருகன் தலைகாட்டவில்லை. அவரது பெயரையும் நிர்வாகிகள் உச்சரிக்கவில்லை.
இந்நிலையில் இன்று (மார்ச் 22) அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் மயில்வேல் என்பவர் அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment