இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்
இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்
நாடாளுமன்றத் தேர்தல் 2019 ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில
மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ளது. கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மக்களை முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர வை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
கடந்த முறை 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, பண மதிப்பிழப்பு செய்யப்படுவதாக டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் அறிவித்தார் மோடி. இதன்பிறகு, இன்று 11.45 – 12 மணிக்குள் டிவியில் மோடி உரையாற்றப்போவதாக அறிவித்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 12.28 மணிக்கு பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:
இன்று மார்ச் 27. சில நிமிடங்களுக்கு முன்பு, இந்தியா ஒரு வரலாற்று சாதனையை படைத்தது. பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக் கோளை 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தியுள்ளது இந்தியா. நமது சொந்த குறைந்த புவி சுற்றுப் பாதை (low earth) செயற்கைக்கோளையே ஏ-சாட் ஏவுகணை மூலமாக, நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம். இதன் மூலம் விண்வெளி போருக்கும் இந்தியா தயாராக உள்ளது.
இன்றைய தினம் தன்னை ஒரு விண்வெளி சக்தி நாடாக இந்தியா பதிவு செய்துள் ளது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள்தான், இந்த சாதனையை செய்துள்ளன. இந்த சாதனை படைத்த 4 வது நாடு இந்தியாவாகும். A-SAT ஏவுகணை இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு, புதிய பலத்தை கொடுக்கும். இந்தியா தனது பலத்தை யாருக்கு எதிராகவும் பயன்படுத்தாது. ஆனால் நாட்டின் பாதுகாப்பி ற்காக இந்தியா எடுத்துள்ள, பாதுகாப்பு முயற்சி இதுவாகும் என்பதை நான் உறுதிய ளிக்கிறேன். நாம் விண்வெளியில் நமது விண்கலங்களை பாதுகாக்க எடுக்கப் பட்டுள்ள முயற்சிதானே இது தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது கிடையாது.
நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, மிஷன் சக்தி மைல் கல்லாக இருக்கும். இந்த திட்டத்திற்கு உதவிகரமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த திட்டத்திற்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அறிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்க, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன்மூலம் செயற்கைக்கோளை துல்லியமாக தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்தது.
புவியிலிருந்து 380கிமீ தொலைவில் இருக்கும் செயற்கைகோள் `மிஷன் சக்தி’ மூலம் துல்லியமாக அழிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்ப த்தை பயன்படுத்தியே இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும். இந்தச் சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.
இந்தியாவின் இத சாதனையை கண்டு உலக நாடுகளில் சில சற்றே மிரண்டு போயுள்ளனவாம்•
No comments:
Post a Comment